தமிழரின் கழுத்தில் வைக்கும் ‘கத்தி’

vijay-kathi-lyca

சமீபத்தில் வெளியான கத்தி திரைப்பட போஸ்டர் மற்றும் டீஸர்களில் லைக்கா நிறுவனத்தின் பெயர் மீண்டும் இடம் பெற்றிருக்கிறது. இதற்கு முன்பு வெளியான போஸ்டரில் லைக்கா நிறுவனத்தின் பெயரைப் பார்த்ததும் கொந்தளித்துப் போன தமிழின ஆர்வலர்கள் அனைவரும் அதை எதிர்த்து குரல் எழுப்பினர்.

லைக்கா நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஷ்கரண் என்கிற ஈழத்தமிழர். ஆனாலும் ராஜபக்ஷேவுக்கும் அவரது மகனுக்கும் மிக நெருங்கிய நண்பர். லைக்கா நிறுவனம் வெளிநாடுகளிலும் இலங்கையிலும் நடக்கும் ஈழ ஆதரவுப் போராட்டங்களை மழுப்பவும் நிறைய ‘ஸ்பான்ஸர்கள்’ செய்யும் நிறுவனம். இந்நிறுவனம் ஏற்கனவே மறைமுகமாக தமிழ் திரையுலகில் பினாமி தயாரிப்பாளர்கள் பெயர்களில் படமெடுத்துள்ளது. தற்போது நேரடியாக ஐங்கரன் நிறுவனத்துடன் இணைந்து விஜய்யின் கத்தி படத்தை தயாரிக்கிறது.

இதை எதிர்த்து தான் தமிழின ஆர்வலர்கள் சுமார் 65 வேவ்வேறு சமூக இயக்கத்தினர் இணைந்து குரலெழுப்பினர். இதில் சீமான் மட்டும் ஏன் லைக்காவுக்கு ஆதரவாகப் பேசினார் என்பது ஒரு கேள்வி? அதன் பின் பேச்சுவார்த்தைகளில் முருகதாஸ் தனது ஃபாக்ஸ்ஸ்டார் நிறுவனமே கத்தியை தயாரிக்கும் என்று கூறிவிட்டார்.

இதேசமயத்தில் தான் ‘புலிப்பார்வை’ என்று ஒரு மகா டுபாக்கூரான படத்தை எடுத்து அதில் பிரபாகரனையும் அவர் மகன் பாலச்சந்திரனையும் விஷமத்தனமாக சித்தரித்து அதற்கு சென்சார் வாங்கி ரிலீஸூம் செய்கிறார்கள். அதே சமயம் ஈழப் பிரச்சனையை உண்மையாகப் பேசிய இயக்குனர் இகோரின் படம் இன்னும் சென்ஸார் தாண்டி வரேவ முடியாமல் பல வருடங்கள் கிடப்பில் இருக்கிறது.

பலர் கத்தி பிரச்சனையை படத்தின் நாயகன் விஜய்க்கு எதிரான விஷமிகளின் வேலை என்று கூறுகிறார்கள். இத்தனைக்கும் விஜய் ஈழ ஆதரவுப் போராட்டங்களில் கலந்து கொண்டு ஈழத்தமிழருக்கு ஆதரவாகப் பேசுபவர். ஆனால் அதெல்லாம் சும்மா என்பது போல் தற்போது மீண்டும் தெனாவெட்டாக கத்தி பட போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. இம்முறை அதில் ஐங்கரன் தயாரிப்பாளரின் பெயர் இல்லை. மாறாக லைக்கா நிறுவனமே முழுவதுமாக அந்தப் படத்தை தயாரிக்கிறதாம்.

தமிழரின் மனத்தை கண்டுகொள்ளாமல்  இப்படிப் படம் வெளியானால் தமிழ் ரசிகர்கள் ‘கத்திக்கு வைப்பார்கள் ஆப்பு’ என்பது உறுதி.