‘அடடே கல்யாணமாகி நூறாவது நாள்’ – அமலா பால்

amala-paul-vijay-100-days

வரவர எதற்கெல்லாம் நூறாவது நாள் கொண்டாடுவதென்ற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது.

இன்று அமலா பாலுக்கு திருமணமாகி நூறாவது நாளாம். ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் இந்த செய்தியை பகிர்ந்திருப்பவர் சாட்சாத் அமலா பாலேதான்.
செய்தியில் சந்தோஷமான நூறுநாட்கள் என்று அவர் பகிர்ந்திருந்தாலும், அவருக்கும் கணவர் விஜய்க்குமான உறவில் சின்னச்சின்ன விரிசல்கள்

விழத்துவங்கியிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடிக்கடி ஆண் நண்பர்களுடன் தண்ணி பார்டிகளுக்குச் செல்வது, தன் விருப்பத்தையும் மீறி படங்களில் நடிப்பது, சம்பாதிக்கும் பணத்தில் முக்கால்வாசியை தன் பெயரில் சொத்து வாங்கிப்போடும்படி நச்சரிப்பது என்று விரிசல்களுக்கு காரணமாக பல சங்கதிகளை பட்டியல் போடுகிறார்கள் இருவருக்கும் நடுவில் நடமாடுபவர்கள்.
இதில் சற்றும் உண்மையில்லையென்றால் யாராவது ‘ஷ் ஷ் ஷ் அப்பாடா கல்யாணமாகி இன்னைக்கோட நூறு நாள் ஆச்சி’ என்று எண்ணிக்கொண்டிருப்பார்களா ?