‘ஐஸ்’ பக்கெட்டில் குளித்த ஹன்ஸிகா

hansika-ice-bucket-challenge

நடிகை ஹன்ஸிகா மோத்வானியின் மனித நேயமிக்க செயல்கள் பற்றி அவ்வப்போது செய்திகள் வந்தவண்ணமே உள்ளன. சமீபத்திய நியூஸ் இது. ஏ.எல்.எஸ் பற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் வரவேண்டும் என்பதற்காக அவர் செய்துள்ள ஸ்டண்ட்தான் அது.

ஏ.எல்.எஸ்(ALS – Amyotrophic Lateral Scelerosis) என்பது ஒரு வகையான தசைகளை கட்டுப்படுத்தும் மூளை நரம்புகள் மொத்தமாக செயலலிழந்துவிடும் நோய். இந்த நோய் தாக்கப் பட்டவர்கள் தங்களது தசைகளை அசைக்கும் திறனை இழந்துவிடுவார்கள். மூச்சு விடுதலையும் இது பாதிக்கும். இந்த நோய் வந்தவர்கள் அதிக பட்சம் 10 வருடங்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.

அமெரிக்காவில் உள்ள ஏ.எல்.எஸ் விழிப்புணர்வு அமைப்பு ஒன்று நிதி திரட்டவும், விழிப்புணர்வு ஏற்படவும் “ஏ எல் எஸ் ஐஸ் பக்கெட் சேலஞ்ச்” என்கிற வினோதமான போட்டியை நடத்துகிறது. இதன்படி உடல் நடுங்கவைக்கும் ஐஸ் கட்டிகள் மிதக்கும் ஐஸ் தண்ணீர் நிரம்பிய பக்கெட்டை அப்படியே தலையில் தூக்கி ஊற்றிக் கொள்ளவேண்டும். பின்னர் ஏ.எல்.எஸ் அமைப்பிற்கு ஒரு தொகை டொனேஷன் தருவார்கள். இதை தொடர் வீடியோவாக பதிவு செய்து ஏ.எல்.எஸ் உள்ளவர்களுக்கான தங்கள் ஆதரவைக் காட்ட இணையத்தில் வெளியிடுவார்கள். மற்றவர்களும் இதைச் செய்து தங்கள் ஆதரவைத் தெரிவிக்க ஊக்கப்படுத்துவார்கள்.

ஹன்ஸிகாவும் அதுபோல ஐஸ்பக்கெட் நிறையத் தண்ணீரை குளிரக் குளிர தன்மேல் ஊற்றிக்கொண்ட வீடியோவை பதிவு செய்து தனது ஆதரவை தெரிவித்திருக்கிறார்(.ஐஸ் கட்டிக்கே ஐஸா?!) அதுபோல தனது நண்பர்களும், ரசிகர்களும் செய்யவேண்டும் என்றும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

எனக்கு நாலு நாளா நல்ல ஜலதோஷங்க.