விஜய் படத்திலிருந்து விலகுகிறார் ஸ்ருதி ?

poojai-shruthi-hasan-news

ஸ்ருதிஹாசன் தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்திப் படங்களில் பிஸியான நடிகையாகிவிட்டார். தமிழ்ப் படங்களில் அவர் நடிக்கமாட்டார் என்றே எல்லோரிடமும் கூறிவந்தார்.

தற்போது ஹரியின் இயக்கத்தில் ‘பூஜை’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதே போல சிம்புதேவனின் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் விஜய்க்கு

ஜோடியாக நடிக்கவும் ஒப்பந்தமாகியிருந்தார்.

தற்போது தனது பேஸ்புக் இணையதள பக்கத்தில் ‘மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது. பெரிய படங்கள் இப்போது இல்லை. காரணத்தை நீங்களே தெரிந்துகொள்ளுங்கள்’ என்று பூடகமாக ஸ்டேட்டஸ் கொடுத்திருந்தார். ஹிந்தியில் ஜான் ஆப்ரஹாம் மற்றும் அனில் கபூருடன் ஸ்ருதி நடித்து வரும்  படங்கள் ஏறத்தாழ முடிவடையும் நிலையில் இருப்பதால் அந்த கைவிடப்பட்ட பெரிய படம் விஜய்யின் படமாக இருக்கலாம் என்று சிபிஐ தகவல்(இதுக்கெல்லாமா ?) தகவல் தெரிவிக்கிறது.