நோலன் நோ கமிங்… முருகதாஸ் பெரு மூச்சுவிடலாம்

திரும்பிய திசையெல்லாம் எண்ணிலடங்கா அவமானங்களையும் அவதூறுகளையும் சந்தித்து வந்த இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், சின்னதாய் ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொள்ளுமளவுக்கு ஒரு செய்தி வந்து சேர்ந்திருக்கிறது.

முருகதாஸின் ‘கஜினியைபார்த்து ’மெமெண்டோ’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் காப்பி அடித்த கிறிஸ்டபர் நோலன் டிசம்பர் 28 அன்று மும்பை ஐஐடி மாணவர்கள் நடத்தும் ஒரு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்குபெறப்போகிறார் என்றும் அந்த நிகழ்ச்சியில் கேட்கப்படும் முதல் கேள்வியே முருகதாஸின் கோவணத்தை அவிழ்ப்பதாக இருக்கும் என்றும் பரபரப்பாக பேசப்பட்டது.

ஆனால் இன்று காலை ஹாலிவுட்டிலிருந்து வந்த செய்தி ஒன்றில் கிறிஸ்டபர் நோலனுக்கு மும்பை நிகழ்ச்சி பற்றி எதுவுமே தெரிவிக்கப்படவில்லை.அவர் இப்போதைக்கு இந்தியாவுக்கு வரும் உத்தேசத்தில் இல்லை என்றும் உறுதியாக மறுக்கப்பட்டுள்ளது.

ஆக இப்போதைக்கு ஸ்வீட் எடு..கொண்டாடு… மூடுக்கு வந்திருப்பார் முருகதாஸ்.