சரியாக 21 ஆண்டுகள் கழித்து, அதாவது 1994 க்குப்பிறகு ஒரே ஆண்டில் கமல் நடித்த  மூன்று படங்கள் அடுத்த ஆண்டில் ரிலீஸாக இருக்கின்றன.

கடந்த வாரம் படப்பிடிப்பு முடிவடைந்த ‘பாபநாசம்’ கடந்த ஆண்டிலிருந்தே கிடப்பில் இருக்கும் ‘விஸ்வரூபம்2’ ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உருவான ‘உத்தமவில்லன்’ ஆகிய மூன்று படங்களையே முறையே பொங்கல் தொடங்கி வரிசையாக ரிலீஸ் செய்ய முடிவெடுத்திருக்கிறாராம் கமல்.

இதற்கு 1994- ல் கமல் நடிப்பில் ‘மகாநதி’ மகளிர் மட்டும்’ ‘நம்மவர்’ ஆகிய படங்கள் ஒரே ஆண்டில் ரிலீஸாகியிருந்தன.

’விஸ்வரூபம்’ படத்தை எப்போதோ ரிலீஸ் பண்ணியிருக்கமுடியும் என்றாலும் முதல் பாகத்துக்கு இருந்த பஞ்சாயத்துக்கள் பழையபடி வந்துவிடாமலிருக்க, அதை முற்றிலும் மறக்கடிக்கும் முயற்சியாகவே அதை கிடப்பில் போட்டார் கமல்.இப்போது முதல் பாகத்தை மக்கள் வெற்றிகரமாக ‘மறந்து’ விட்டார்கள்.

மற்ற இரு படங்களின் போஸ்ட்-புரடக்‌ஷன் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்க, அவற்றின் ஃபைனல் சவுண்ட் மிக்ஸிங் பணிகளுக்காக லாஸ் ஏஞ்சல்ஸ் செல்லவெருக்கும் கமல் சென்னை திரும்பியதும் மூன்று பட அறிவிப்புகளையும் ஒரே மேடையில் நிகழ்த்தவிருக்கிறார்.

‘விஸ்வரூபம்2’ முதல் பாகம் போலவே ஊத்திக்கொண்டாலும் மற்ற இரு படங்களும் கமலின் பேர்சொல்லும் பிள்ளைகளாக இருக்கும் என்று நம்பித்தான் ஆகவேண்டும்.

Related Images: