ஆர்யாவும் விஜய்சேதுபதியும் இணையும் ‘புறம்போக்கு’

இயக்குனர் ஜனநாதன் சிறிது கால இடைவெளிக்குப் பின் மீண்டும் படம் இயக்குகிறார். அவரது பைனரி பிக்சர்ஸ் மற்றும் யு டி வீ  மோஷன் பிக்சர்ஸ் இணைந்து  வழங்கும் இப்படத்தின் பெயர் ‘புறம்போக்கு’ .ஆர்யா, விஜய் சேதுபதி, ஷ்யாம் , மற்றும் கார்த்திகா என நட்சத்திர குவியலாக திகழும் இந்த படம் துரித வேகத்தில் படமாக்கபடுகிறது. ‘புறம்போக்கு’ படத்தை பற்றி சில கருத்துகளை பகிர்ந்துக் கொள்கிறார் இயக்குனர் ஜனநாதன்.
‘சிறையில் உள்ள எல்லோருமே குற்றவாளிகள் அல்ல.. நமது சரித்திரத்தின் பெரும் அத்தியாயங்கள் சிறை சாலையில் தான்  அரங்கு ஏறி உள்ளது. மகாத்மா காந்தி , நெல்சன் மண்டேலா  போன்ற மாபெரும் தலைவர்கள்  சிறைசாலையில் இருந்து தான் தங்களது  வெற்றி சரித்தரத்தை துவங்கினர்.  சிறைச்சாலை என் படத்தில் ஒரு முக்கிய கதா பாத்திரமாகவே இருந்து உள்ளது. என் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களின் பெயர்களும் நமது சரித்தரத்தில் இருந்து எடுக்க பட்டது தான்.
சுதந்திர போராட்ட காலத்தில் மதுரையில் பிறந்து பின்னர் ஆந்திராவில் வாழ்ந்த வரலாற்று நாயகன் பாலுவின் பெயர்தான் ஆர்யாவுக்கு சூடப்பட்டு உள்ளது. சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு ஆற்றிய தமிழகத்தின் புரட்சி வீராங்கனை வேலு நாச்சியார் அவர்களின் பாசறையில் முக்கிய பங்கு வகித்து , பின்னர் ஆங்கிலேயர்களின் ஆயுத கிடங்கை மனித வெடிகுண்டாக மாறி அழித்த குயிலின் பெயர் கார்த்திகாவுக்கும், ஆங்கிலேயர் காலத்தில் அவர்களது கல்வி முறையை அறிமுக படுத்தியவரும், ஆங்கிலேயர்களின் கடுமையான தண்டனை முறையை அறிமுக படுத்தியவருமான  மெக்கலே வின் பெயர் ஷ்யாமுக்கும், மிகவும் வித்தியாசமான யாரும் எதிர்பாராத ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய் சேதுபதியின் கதா பாத்திரத்துக்கு யமலிங்கம் என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
கலை இயக்குனர் செல்வகுமாரின் கை வண்ணத்தில் உருவான அந்த பிரம்மாண்டமான சிறை சாலை அரங்கின் , ஒவ்வொரு சதுரத்தையும் தனது நேர்த்தியான ஒளிப்பதிவு மூலம் படமாக்கி உள்ளார் ஒளிப்பதிவாளர் எக்கம்பரம். ‘.