விஜய்,முருகதாஸ் கைதாகிறார்கள்?

நடிகர் விஜய்க்கும் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸுக்கும் ராகுகாலம், எமகண்டம், ஏழரை நாட்டுச்சனி போன்றவை ஏக காலத்தில் தோன்றி எக்காளமிடுகிறது போலும்.

முருகதாஸ் கதைத்திருட்டு மற்றும் சாதி விவகாரத்தில் மாட்டி சந்தி சிரிக்க விஜய்க்கோ ரசிகர் மரணம், சிலை விவகாரம், இளையதளபதி பட்டவிவகாரம் போன்ற பஞ்சாயத்துக்கள் கியூ கட்டி நிற்கின்றன.

இவையெல்லாம் போதாதென்று லேட்டஸ்டாக மதுரை கோர்ட்டில் விஜய் மீதும், முருகதாஸ் மீதும் கோர்ட் அவமதிப்பு வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டுள்ளது.

மேட்டர் ?

2ஜி அலைக்கற்றை ஊழல் பற்றியது.

‘கத்தியில் மீடியாவையும், பீர் ஃபேக்டரி முதலாளி மல்லையா மற்றும் பெப்சி குளிர்பான கோஷ்டிகள் மீதும் கடுமையான விமர்சனம் வைத்தமுருகதாஸ் 2ஜி ஊழல் குறித்தும் உறுமியிருந்தார்.

‘வெறும் காத்தை வச்சே 2ஜிங்குற அலைக்கற்றை ஊழல் செஞ்ச நாடு இது’என்ற அந்த வசனத்துக்கு தியேட்டர்களில் விசில் பறந்தது.

தற்போது அந்த விசில் சத்தங்களே விஜய்க்கும், முருகதாஸுக்கும் எமனாக மாறி கோர்ட் வாசல் வரை கொண்டு வந்துவிட்டிருக்கிறது.

2ஜி வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கும்போது, அதை ஊழல் என்று எப்படி கூறலாம் என்று கேள்வி கேட்டிருக்கிறார் வழக்கு போட்ட புண்ணியவான்.

இந்த வழக்கில் இருவரும் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்ற யூகங்களும் இல்லாமல் இல்லை.

விசாரணையை மதுரை கோர்ட்டிலிருந்து பெங்களூர் கோர்ட்டுக்கு மாற்றும்படி வேண்டுகோள் வைக்கிறோம்.