’கூட்டணியா,முருகதாஸுடனா ஹெஹ்ஹே’ -அஜீத்

கடந்த ஒன்றிரண்டு தினங்களாக  மீஞ்சூர் கோபியை இணையங்களில் கழுவி ஊற்ற முயற்சித்து தன்னைத்தானே அசிங்கப்படுத்திக்கொண்ட முருகதாஸ், ‘சரி அடுத்த பொழப்ப பாப்போமே’ என்று முடிவு செய்தோ என்னவோ, அடுத்த படத்தில் தானும் அஜீத்தும் இணையப்போவதாக அண்ட ஆகாசப் புழுகு ஒன்றை அவிழ்த்துவிட்டார்.

அதுவும் தனக்கு முதல்பட வாய்ப்பைக்கொடுத்தவர் அஜீத் என்பதால் அவரை வைத்து இயக்க தான் எப்போதும் தயாராக இருப்பதாக, அதாவது அஜீத்தை வைத்து இயக்குவது என்பது இவரது பெருந்தன்மை என்பது போல அந்தச் செய்தி பரப்பப்பட்டது.

அந்தச் செய்திகளைப் படித்து கடுப்பான அஜீத், தனக்கு அப்படி ஒரு எண்ணம் இப்போதைக்கு மட்டுமல்ல எப்போதைக்கும் இல்லை என்று தனது நெருங்கிய வட்டாரங்களில் மறுத்து வருகிறாராம்.

முருகதாஸின் மூக்கை உடைக்கப்போகும் அந்தச் செய்தி அஜீத் வாயிலிருந்து நேரடியாக வரும் நேரம் வெகுதூரத்தில் இல்லை.