மாறுகிறதா அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ டைட்டில்?

சமீபகாலமாக இணையங்கள் சினிமாக்காரர்களுக்கு தொடர்ந்து வினையங்களாகவே மாறி வெறுப்பேற்றி வருகின்றன. இன்றைய டார்கெட் அஜீத்-கவுதம் கூட்டணியின் ‘என்னை அறிந்தால்’ டைட்டில்.

இதே ‘என்னை அறிந்தால்’ டைட்டிலில் கவர்ச்சித்தொட்டி ஷகீலா குட்டி நடித்ததாக, அல்லது இனிமேல்தான் ரிலீஸாகப்போகிறதோ என்னவோ ஒரு பட டிசைன் இன்று காலைமுதல் ஃபேஸ்புக்,ட்விட்டர் மற்றும் வாட்ஸ் அப் போன்ற தளங்களில்  தொடர்ந்து பதியப்பட்டு வருகிறது.

அதையொட்டி விஜய் ரசிகர்களும் வேறு சிலரும் எகத்தாளமாக கமெண்ட் போட்டுவர கடுப்பாகி வரும் அஜீத் ரசிகர்கள், அவர்களை பதிலுக்கு திட்டித் தீர்த்துவருகின்றனர்.

மேற்படி டைட்டிலோடு நான் வருவேன் என்றும் இருப்பதால் அப்படி ஒரு டைட்டிலை ஷகீலா படக்குழுவினர் தயாரிப்பாளர் சங்கத்தில் அல்லது கில்டில் பதிந்து வைத்திருக்கவும் வாய்ப்புண்டு.

ஸோ எந்த நிமிடமும் அஜீத்பட டைட்டில் மாற்றப்படும் வாய்ப்புள்ளது.

ஒரு முக்கிய பின்குறிப்பு; கல்லூரி மாணவராக இருந்த காலத்தில் கவுதம் வாசுதேவமேனன் ஒரு தீவிர ஷகீலா ரசிகர். அவரது படங்களை ஒன்றுவிடாமல் பார்ப்பவர்.