‘என்னை அறிந்தால்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

நாம் ஏற்கனவே எழுதியிருந்தபடி, அஜீத்-கவுதம் கூட்டணியின் ‘என்னை அறிந்தால்’ பொங்கல் ரிலீஸ் என்று இன்று தயாரிப்பாளர் தரப்பால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஷகீலா பட தலைப்பு விவகாரத்தை அஜீத் அவ்வளவு சீரியஸாக எடுத்துக்கொள்ளாததால் தலைப்பு மாற்றப்படமாட்டாது என்று தெரிகிறது.

இந்த அறிவிப்பு சுமார் இரண்டு மாதங்கள் இருக்கும்போதே வெளிவருவதற்கு காரணம் ‘ஐ’ த பொய் படத்தை கையில் வைத்துக்கொண்டு ‘இப்ப வரப்போறேன்… அப்ப வரப்போறேன்’ என்று பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்கும் ஆஸ்கார் ரவிக்குத்தானாம்.

‘நாங்க உறுதியா பொங்கலுக்கு வர்றோம். முடிஞ்சா மோதிப்பார்’ இதுதான் ’என்னை அறிந்தால்’  பட டீமின் அறிவிப்பு. செம கெத்தான அறிவிப்புதான்