’ஐ’ மேலும் தள்ளிப்போவது WHY? – சில்லி சீக்ரெட்ஸ்

இவ்வளவு காலமும் கிராஃபிக்ஸ் பணிகள் முடியாததால்’ஐ’ த பொய்’  ரிலீஸ் தள்ளிப்போவதாக சொல்லிக்கொண்டு வந்த தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்ச்ந்திரன்,  தற்போது ‘லிங்கா’ ரிலீஸைக் காரணம் காட்ட ஆரம்பித்திருக்கிறாராம்.

ஆனால் உண்மையில், படம் எப்போதோ தயாராகிவிட்டதாகவும், இயக்குநர் ஷங்கர்,நாயகன் விக்ரம்  துவங்கி உதவி இயக்குநர்கள் வரை கோடிக்கணக்கில் இருக்கும் சம்பள பாக்கியை செட்டில் பண்ண பணம் இல்லாததால் தான் இந்த இழுவை என்கிறது நம்பத்தகுந்த வட்டாரம்.

இந்நிலையில் எக்கச்சக்கமாக சேர்ந்துவிட்ட பழைய பாக்கிக்காக மதுரை அன்புவும் அவரது தம்பு அழகரும் ‘ஐ’ படத்தின் தியேட்டர் விநியோக உரிமை மொத்தத்தையும் எழுதித்தரும்படி ஆஸ்கார் ரவியை மிரட்டி வருவதாகவும், ரவி தலைமறைவாக நடமாடுவதாகவும் அவரோடு சேர்ந்து மேற்படி தகவல்களும் தலைமறைவாக நடமாடுகின்றன.