’ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ -விமர்சனம்

’வந்தான் வென்றான்’ கண்டேன் காதலை’ ’சேட்டை’ போன்ற பொழுதுபோக்குப் படங்களை இயக்கிய கண்ணன் சமூகத்துக்கு ஏதாவது சொன்னால்தான் பிற்காலத்தில் நம்மை நாலுபேர் ‘டைரக்டராக’மதிப்பார்கள் என்று முடிவெடுத்து ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’க்களை கையிலெடுத்திருப்பார் போல.

நாஸரின் தொழிற்சாலையில் ஓவர் நாய்ஸ் இருக்கிறது. இதனால் தொழிலாளர்களுக்கு பெரும்பாதிப்பு ஏற்படும் என்பதைக் கண்டறியும் டாக்டர் ப்ரியா ஆனந்த், அதை எதிர்த்துக்கோர்ட்டுக்குப் போக, அவரைக் கொலைசெய்யத்திட்டமிடுகிறார்கள் நாய்ஸரும், அவரது மனைவி அனுபமாவும். இதே ரெயிலில் பயணம் செய்யும் வெமலும் சூரியும் ப்ரியாவுடன் கைகோர்த்து அவரது போராட்டத்துக்கு அவ்வப்போது ஒன்றிரண்டு குத்தாட்டங்களும் போட்டுவிட்டு உதவுகிறார்கள்.

ஹீரோயின் சப்ஜெக்ட் என்பதாலோ என்னவோ வெமல் [டைட்டில் கார்டுல பேரை அப்பிடித்தாங்க போடுறாங்க] சுமார் மூஞ்சி குமாருக்கும் சற்று கீழாகவே காட்சியளிக்கிறார். நடிப்புன்னா என்ன விலை? அதை எங்க விக்கிறாங்க பாஸ்?’ என்றுஅவர் முக கெஞ்சியபடியே இருக்கிறது படம் முழுக்க. அவரோடு சரிசமமாக படம் முழுக்க வரும் சூரி வரவர ரொம்ப ஸாரி. ஹோம் வொர்க் பண்ணாமஇப்பிடி இன்னும் ரெண்டு படத்துல  ஓ.பி அடிச்சீங்கன்னா கஞ்சாக்கருப்பு, கருணாஸ் மாதிரி உங்களையும் வூட்டுக்கு அனுப்பிருவாங்க பாஸ்.

படத்தின் ஒரே ஆறுதல் ப்ரியா ஆனந்த். சமூகப்பிரச்சினைகள் குறித்து ஆதங்கத்துடன் பக்கம் பக்கமாகப் பேசும்போதும், அதே சமூகம் வாடி வதங்கிவிடக்கூடாதே என்பதற்காக கிளாமரை வாரிவழங்குவதிலும் பல ஸ்டெப்கள் முன்னேறியிருக்கிறார். குறிப்பாக ‘மழைக்காத்தா..’ பாடலில் பாத்தா பாத்துக்கிட்டே இருக்கலாம் போல அவ்வளவு தாராளம்.

விசாகா சிங் ஒரு கவுரவ வேடத்திலும், இனிய ஒரு அகவுரமான பாடல்காட்சியிலும் வந்துவிட்டுப்போகிறார்கள். நாசரின் மனைவியாக,வில்லியாக வரும் அனுபமா, ‘எப்பிடி இவ்வளவு குண்டானேன்னு டிப்ஸ் அனுப்பும்மா.

இசை இமான். ப்ச்.. ஒளிப்பதிவு பி.ஜி.முத்தையா ..ப்ச்…ப்ச்…

சமூகத்துக்கு ஒரு நல்ல கருத்தைச் சொல்ல முயற்சிக்க நினைத்த வகையில் ஓ.கே. கண்ணன். ஆனா கருத்து கருத்தாத்தான் இருக்கனும். அதுல கமர்சியலும் காமடியும் கலக்கனும்னா அதுவும் அதே ஊர்லதான் இருக்கனும். ஆனா இங்க கருத்து கன்னியாகுமரியிலயும் கமர்சியல் காஷ்மீர்லயுமால்ல இருக்கு?

ஒரு ஊர்ல ரெண்டு சோதா.