அறிமுக நாயகன் பிரதாப், த்ரிஷ்யம்’ மலையாள சூப்பர் ஹிட் படத்தில் மோகன்லாலின் மகளாக நடித்த அன்ஷிபா ஜோடியை வைத்து புதுமுக இயக்குநர் ஜெயபாலகிருஷ்ணன் இயக்கியிருக்கும் படம் ‘பந்து’.

இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார் ‘இதுக்கு முந்தி எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே’ நடிகர் விக்னேஷ்.

பொதுவாக ஆடியோ விழாக்களில், அதுவும் ‘பந்து’ போன்ற புதுமுகங்களின் படத்தில் வாழ்த்துச்செய்திகள் மேடையில் இடம் பிடிக்கும். ஆனால் இதில் படம் சம்பந்தப்பட்டவர்கள் ஓரிரு வரிகள் பேசி முடிக்க கடைசியில் மைக்கைப்பிடித்து தான் சினிமாவில் எப்படியெல்லாம் நொந்து நூடுல்ஸ் ஆனார் என்பதை சற்று ஓவராகவே புலம்பினார்.

‘இதுவரைக்கும் 48படங்கள்ல நடிச்சுட்டேன். ஆனா எந்த தயாரிப்பாளர்கிட்டயும் நெருங்கிப் பழகல.ஆனா இப்ப சொந்தமா படம் எடுக்க ஆரம்பிச்ச அப்புறம்தான் தயாரிப்பாளர்களோட அருமை தெரியுது. நடிகரா இருக்கப்ப ஈஸியா ஸ்டார் ஹோட்டல்ல ரூமும் ஃப்ளைட் டிக்கட்டும் கேக்குறோம். ஆனா அதைப்புரட்டுறதுக்கு ஒரு புரடியூசர் எவ்வளவு கஷ்டப்படுறார்னு என் அனுபவத்துலதான் தெரிஞ்சுக்கிட்டேன்’

இந்த ரேஞ்சில் போனது விக்னேஷின் பேச்சு. ‘ பந்து’ குழுவினர் கொஞ்சம் ஆடித்தான் போனார்கள்.

Related Images: