’ர’ என்ற ஒற்றை எழுத்துப் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு விழா இன்று பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.

இயக்குநர் பிரபு யுவராஜ், நாயகன் அஷ்ரஃப் இருவருமே விமான ஓட்டிகள். படத்தின் ஒரு முழுநீளக்காட்சியையும், ஒரு குறும்பாடல் காட்சியையும் பார்த்தபோது கண்டிப்பாக ஒரு நேர்த்தி தெரிந்தது.

‘உங்களைமாதிரியே ஹீரோயினையும் விமானத்துலயே புடிச்சி ஒரு ஏர் ஹோஸ்டஸை நடிக்கவைத்திருக்கலாமே? என்று கேட்டால். ‘அப்படியும் சிலபேரைப்பார்த்தோம். அழகாக இருந்தாலும் நடிப்பு என்று வருகிறபோது அவர்கள் சிரமப்பட்டதைப் புரிந்துகொண்டு இந்த அதிதி செங்கப்பாவை நாயகியாக்கினோம்’ என்கிறார்கள்.

படம் த்ரில்லர் வகையறா. ஃப்ளைட்டை ஓட்டிக்கொண்டே கதையை யோசித்திருப்பார்கள் போல. அடுத்தவாட்டி விமான பயணம் மேற்கொள்ளும்போது, அதில் அஷ்ரஃபோ, யுவராஜோ விமான ஓட்டிகளாக இருக்கிறார்களா? என்று செக் பண்ணிக்கொண்டு ஏறுவது நல்லது.

நல்லா கிளப்புறாங்கப்பா பீதியை….

Related Images: