அமரர் ருத்ரையாவுக்கு ஸ்ரீப்ரியா இரங்கல்

’அவள் அப்படித்தான்’ படம் எப்படி தனிச்சிறப்பு வாய்ந்த ஒன்றோ அதுபோலவே ஒன்று அப்படத்தில் ஸ்ரீப்ரியாவின் தனித்தன்மை வாய்ந்த, சந்தேகத்துக்கிடமின்றி தேசிய விருது கிடைத்திருக்கவேண்டிய ஒன்று.

சற்றுமுன்னர்  ருத்ரையாவின் இறுதியாத்திரை தொடங்கிய நிலையில், நடிகை ஸ்ரீப்ரியா அவருக்கு இரங்கல் செய்தி அனுப்பியுள்ளார்.

‘காலத்தை வென்ற தனித்தன்மை கொண்ட காவியமான ‘அவள் அப்பைடித்தான்’ படத்தை இயக்கிய இயக்குநர் ருத்ரையாவின் மறைவு துரதிர்ஷ்டவசமானது. ‘அவள் அப்படித்தான்’ என் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படம் மட்டுமல்ல. இந்திய சினிமா சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய ஒரு படமுமாகும்.

நான் தற்போது வெளிநாட்டில் இருப்பதால் அவரது இறுதி யாத்திரையில் கலந்துகொள்ளமுடியவில்லை. எனவே இந்த தருணத்தில் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

என் இனிய இயக்குநரே உங்கள் ஆத்மா சந்தியடையட்டும்’