‘’தயாரிப்பாளரின் ’கேபிளை’ அறுத்த சங்கர்

பிரபல சாப்பாட்டு ராமன் கேபிள் சங்கரை நம்பி ‘தொட்டால் தொடரும்’ படத்தைக்கொடுத்த சிங்கப்பூர் தொழில் அதிபர் இனி தமிழ்சினிமா தன்னை விட்டால் போதும் என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம்.

காரணம் படத்தின் ரிசல்ட் அவ்வளவு பரிதாபமாக வந்திருக்கிறது.

சுமார் ஆறுமாதங்களுக்கு முன்பே படத்தின் காப்பி ரெடியாகி, மூன்று மாதங்களுக்கு முன்பே சென்சார் பண்ணப்பட்ட ‘தொட்டால் தொடரும்’ படத்தைப் பார்த்தவர்கள் தங்கள் கண்களை டெட்டால் போட்டுக் கழுவும் கதிக்கு ஆளாகி விடுகிறார்களாம்.

லாபமே வரவில்லையென்றாலும் கூட, சினிமாவின் மீது உள்ள தீராக்காதலால் தொடர்ந்து படங்கள் தயாரித்து வந்தார் தயாரிப்பாளர் துவார் சந்திரசேகர். தொழில் அதிபராக சிங்கப்பூரில் ஒரு சிங்கம் போல் இருந்துவரும் அவரிடம், ’ஒரு கோடியில் படத்தை முடித்துத்தருகிறேன்’ என்று ரீல் விட்டு, சொந்த கணக்குக்கு பல லட்சங்களை சுருட்டிவிட்டு, மூன்று கோடிக்கு இழுத்து பட்டை நாமம் சாத்தியதோடு நில்லாமல் படம் என்ற பெயரில் ஒரு ஜடம் எடுத்துவிட்டாரே’ என்று புலம்புகிறார்கள் தயாரிப்பாளரின் நலம் விரும்பிகள்.