‘செட்’டில் கையில் வைத்திருக்கும் பர்ஸ் விழுந்தால் கூட அதை அஸிஸ்டெண்ட் தான் குனிந்து எடுத்து தரவேண்டும் என்கிற கெட்டப்பில் இருக்கும் நடிக நடிகைகள் திரு மோடி அவர்களின் க்ளீன்(போல்ட் ஆப்) இந்தியா நாடகத்தில் பங்குபெற விளக்குமாறு தூக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

சல்மான்கான், கமல்ஹாசன், சமந்தா, ப்ரியங்கா சோப்ரா தொடங்கி பெரும் அமைச்சர்கள் வரை பங்கேற்று போஸ் கொடுத்த க்ளீன் இந்தியா திட்டம் உண்மையில் என்ன ?

கங்கை, காசி ,வாரணாசி போனற இடங்களை சுத்தப்படுத்துகிறேன் பேர்வழி என்று
கார்ப்பரேட் கம்பெனிகாரர்கள் ‘நமோ’ அவர்களுடன் ஒப்பந்தம் போட்டு சுமார் 10 ஆயிரம் கோடிகள் ரூபாய் வரை டீல் பேசி மக்கள் பணத்தை கறந்துவிட்டு, அதை மறைத்து மக்களுக்கு ‘நாம’ம் சாத்த காட்டும் வித்தையில் நடக்கும் கூத்து.

இதில் இப்போது புதிதாக பங்கேற்றிருப்பவர் நம்ம த்ரிஷ்ஷ்ஷா.. இன்று காலை  என்விரான்மென்டலிஸ் பௌன்டேஷன் ஆப் இந்தியா(EFI) எனும் தன்னார்வ நிறுவனத்தில் புதிதாய் ஆரம்பிக்கப்பட இருக்கும் (நல்லா கவனிங்க .. இனிமே தான் ஆரம்பிக்கிறாய்ங்க..)
விலங்குகள் காப்பகத்தை 16 வாலன்டியர் இளைஞர்களுடன் சேர்ந்து கூட்டி சுத்தம் செய்ததாக தனது ட்விட்டரில் அன்போடு பகிர்ந்திருக்கிறார் த்ரிஷா.

த்ரிஷாவுடன் சேர்ந்து குப்பையைக் கிளறிய… ஸாரி கூட்டிய 16 இளைஞர்களும் தங்களின் மனசு குப்பையாச்சே என்று இப்போது புலம்புகிறார்களாம். நியாயமா மேடம் இது ?

Related Images: