அஜீத், த்ரிஷா, அனுஷ்கா நடிக்க கௌதம் வாசுதேவமேனன் இயக்கும் ‘என்னை அறிந்தால்’ பொங்கல் ரிலீஸ் என்பது உறுதியாகிவிட்டது.

படத்தின் டீஸர் இந்த மாதம் வெளியாகி பல லட்சம் ஹிட்டுகளைப் பெற்ற நிலையில் இப்படத்தின் பாடல்களும், ட்ரெய்லரும் புத்தாண்டு பிறக்கும் வேளையில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் வித்தியாசமாக ‘தல’ ரசிகர்களே அன்று பாடல்களை வெளியிடுவார்கள் என்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜின் தரப்பிலிருந்து ட்ரெய்லர் இசையமைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக தள்ளிப் போன ட்ரெய்லர் படத்தின் பாடல்களுடன் வெளியிடப்பட இருக்கிறது.

Related Images: