பெரும் எதிர்பார்ப்புடன் பொங்கலுக்கு ரிலீஸாவதாக இருந்த ஷங்கர், விக்ரம் கூட்டணியின் ‘ஐ’ ரிலீஸ் மூன்று வாரம் தள்ளிப்போகிறது?.

இதன் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் தன்னிடம் கடனாக வாங்கிய பெருந்தொகையை தராமல் ஏமாற்றி படத்தை ரிலீஸ் செய்ய முயலுவதாகவும், அப்படி ஒருவேளை படம் ரிலீஸாகிவிட்டால் ‘ஐ’ படத்துக்காக கொடுத்த கடனை தன்னால் எப்போதுமே வசூலிக்க முடியாது என்றும் அதனால் பட வெளியீட்டை உடனே நிறுத்த வேண்டும் என்றும் சென்னை ஐ’கோர்ட்டில் பிக்‌ஷர் ஒர்க்ஸ் மீடியா நிறுவனம் முறையிட்டிருந்தது.

இன்று விசாரனைக்கு வந்த இந்த மனுவுக்கு வரும் 30 ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படியும் அதுவரை அடுத்த மூன்று வாரங்களுக்கு’ஐ’ படத்தை வெளியிட இடைக்காலத்தடை விதிப்பதாகவும் சென்னை உயர்நீதிமன்றம் ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்கு மனு அனுப்பியது.

ஐநூறுக்கும் மேற்பட்ட தியேட்டர்கள் புக் பண்ணப்பட்டு, பல லட்சங்களில் பொங்கல்வெளியீடு என விளம்பரங்கள் செய்யப்பட்ட நிலையில் இந்த தடை ஆஸ்கார் ரவிக்கு பெரும் இடிச்செய்திதான்.

சில பல குட்டிக்கரணங்கள் அடித்தாவது ஆஸ்கார் ரவி படத்தை பொங்கலுக்கு கொண்டுவரவே முயற்சிப்பார். அதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Images: