சென்னையிலுள்ள விர்சூ ஸ்டுடியோஸ் என்கிற டிஜிட்டல் கிராபிக்ஸ் நிறுவனம் ஒரு 3-டி நாவலை தயாரிக்கிறது. அந்த நாவலின் நாயகனாக ஷாருக்கான் நடிக்க இருக்கிறார்.

3-டி நாவல் என்பது சாதாரண காமிக்ஸ் கதைகளைப் போன்று படங்கள் வரையப்பட்டு சொல்லப்படும் கதையாகும். 3-டி நாவலில் 3-டி கிராபிக்ஸில் வரையப்பட்ட படங்கள் இடம் பெற்று புத்தக வடிவிலும் அல்லது கம்ப்யூட்டரிலும் படிக்கும்படியும் இருக்கும்.

இக்கதையின் முன்னோட்ட படங்களையும், கதையின் ஒன்லைனையும் கொண்டு ஷாருக்கானிடம் ஒரு வருடத்திற்கு முன்பே அவரை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். ரமேஷ் தமிழ்மணி எழுதியிருக்கும் கதைக்கு 3-டி டிஜிட்டல் படங்களை வரைந்திருக்கிறார் இல்லஸ்ட்ரேட்டர் ரமேஷ் ஆச்சார்யா. இந்த நாவலை புத்தக வடிவிலும் சேர்த்து வெளியிட இருக்கிறார்களாம்.

‘அதர்வா – தி ஆரிஜின்’ என்பது நாவலின் தலைப்பு. கையில் கோடரி மற்றும் சில ஆயுதங்களை ஏந்திய புராண காலத்து அதர்வா என்கிற ஹீரோ தனது பிறப்பின் ரகசியத்தைத் தேடிச் செல்லும் பயணமே நாவலின் கதைக்களம்.

நாவல் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி போன்ற இந்திய மொழிகள் பலவற்றில் வெளிவரவிருக்கிறது. 3-டி நாவல்கள் இந்தியாவில் புதுசு. ஆங்கிலத்தில் பல நாவல்கள் இப்படி வெளிவந்திருக்கின்றன. இந்தியாவில் இம்முயற்சியை தொடங்கியதற்காக தயாரிப்பாளர் மோகனைப் பாராட்டலாம். இந்த வருடத்தின் மத்தியில் நாவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாவலின் ட்ரைலர் இங்கே..

Related Images: