‘உள்ளாடை விளம்பரமா? உவ்வே’ என்கிறார் சமந்தா

பரபரப்புக்கும் மந்தநிலைக்கும் நடுவில் எப்போதும் பயணப்பட்டுக்கொண்டிருப்பவர் நடிகை சமந்தா. ‘நான் ஈ’ படத்தில் எவரெஸ்டின் உச்சிக்குப் போயிருந்த அவரை கால்டவுசர் உடுத்தி ‘அஞ்சான்’-ல் குழிதோண்டிப்புதைத்திருந்தார் லிங்கு.

சித்தார்த் லவ் மேட்டருக்கு அப்புறம் அவ்வளவாக செய்திகளில் அடிபடாமல் இருந்த சமந்தா சமீபமாக உள்ளாடை விளம்பரம் ஒன்றுக்கு படு செக்ஸியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருப்பதாகவும் அதற்கு முதலில் மறுத்தவர், சம்பளத்தொகையை கேட்டவுடன் கம்ப்ளீட் சரண்டர் என்றும் தகவல்கள் பரவின. அந்தத்தொகை மூன்று நாட்கள் அந்த விளம்பரப்படத்தில் நடிக்க ஆறுகோடி ரூபாய் என்று சொல்லப்பட்டது.

முதலில் இணையங்களில் இந்தச்செய்தி பரவியபோது மவுனம் காத்த சமந்தா இன்று ஒரு ஆங்கில நாளிதழில் வந்தவுடன் தாம் தூம் என்று வானுக்கும் பூமிக்குமாக குதிக்க ஆரம்பித்திருக்கிறார்.

‘ஜனங்க மத்தியில எனக்குன்னு ஒரு இமேஜ் இருக்கு. நான் எப்பிடி பணத்துக்காக உள்ளாடை விளம்பரத்துல எல்லாம் நடிப்பேன்’ இந்த நியூஸ் சுத்த நான்சென்ஸ்’ என்கிறார் சமர்த்தாக.

‘அப்ப அஞ்சான்’ குட்டியூண்டா ஒரு டவுசர் போட்டிருந்தீகளே அது உள்ளாடை இல்லாம நல்லாடையாடா செல்லம்?