ஜோதிகாவின் ’36 வயதினிலே’

நீண்ட இடைவெளிக்குப் பின் ஜோதிகா நடிப்பில் வெளியாக இருக்கும் 36 வயதினிலே படத்தின் பாடல்கள் ஏப்ரல் 1 ஆம் தேதி சென்னை சத்யம் தியேட்டரில் வெளியிடப்பட இருக்கின்றன.

‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ என்கிற மலையாளப்படத்தின் ரீமேக்கான 36 வயதினிலே யின் கதையைக் கேட்டதும் ஜோதிகா வீட்டில் கடும் எதிர்ப்புக்களை கடந்து நடிக்க சம்மதித்தார்.  பின்பு சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட்டே படத்தை தயாரிக்கவும் களமிறங்கினார்கள். நாயகியை மையமாகக் கொண்ட வித்தியாசமான கதை இது.

படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் படத்துக்காக மூன்று பாடல்களை போட்டுள்ளார். ஆல்பத்துடன் ஐந்து தீம் இசைகளும், 3 கரோகி பாடல்களும் இணைக்கப்பட்டு வெளியிடப்பட இருக்கின்றன. பாடல்கள் வெளியிடலுக்கு ஜோவும் சூர்யாவும் இணைந்து வருவார்கள் என்று தெரிகிறது.