மணிரத்னத்தின் அடுத்த படமான ஓ காதல் கண்மணி ஏப்ரலில் ரிலீஸாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என்ற மூன்று மொழிகளில் வெளிவர இருக்கிறது இந்தப் படம்.

மார்ச் 15ல் வெளியான படத்தின் ஒரு பாடல் ‘மென்டல் மனதில்’ ஹிட் வரிசையில் சேரந்து கொண்டது. ரஹ்மானும் மணிரத்னமுமே பாடலை எழுதியுள்ளார்கள். படத்தின் ஜோடிகளான சல்மானும், நித்யாவும் சேர்ந்து நடித்த மலையாளப் படம் ஒன்று சமீபத்தில் வெளியாகி ஹிட்டாகியுள்ளது. இந்த ஜோடிப் பொருத்தம் படத்தை ஹிட்டாகியிருப்பதாக சொல்கிறார்கள்.

தொடர்ந்து தோல்விகளாக கண்ட மணிரத்னம், படத்துக்கு கிடைத்த இந்த நல்ல ஓப்பனிங்குகளெல்லாம் சேர்ந்து ஓ.கே கண்மணியை ஓ.கே. செய்துவிடக்கூடும் என்று எதிர்பார்ப்பில் இருக்கிறாராம். இவ்வளவு பெரிய அனுபவமிக்க இயக்குனரான பின்னும் காதல் கதைகளிலேயே மணி ஏன் மீண்டும் சிக்கிக் கொண்டிருக்கிறார் என்பது படம் வெளிவந்தால் தான் தெரியும்.

Related Images: