சந்தானத்தின் டான்ஸ் மாஸ்டர் ஆர்யா

சந்தானம் மற்றும் ஆஷ்ணா ஜாவேரி இணையாக நடிக்கும் ‘இனிமே இப்படிதான்’படப்பிடிப்பு பாண்டியில் நடந்துக் கொண்டு இருக்கிறது. படப்பிடிப்பு நடக்குமிடத்தின் அருகிலேயே ஆர்யா  ‘யட்சன்’ படப்பிடிப்புக்காக வந்து இருந்தார். அவருக்கு சந்தானம் அருகில் இருப்பது தெரிந்ததும் அந்த படப்பிடிப்பு தளத்துக்கு செல்ல முடிவெடுத்தார்.

சந்தானத்தின் நேரம் அவருக்கு அன்று நடிகையுடன் டான்ஸ் ஆடவேண்டிய காட்சி. அந்த நேரம் அங்கு ஆர்யா வந்தாரே  பார்க்கலாம், ஒரே களேபரம் தான். ஷூட்டிங் ஸ்பாட்டுக்குள் வந்த ஆர்யா திடீரென டான்ஸ் மாஸ்டர் அவதாரம் எடுத்தார்.  சந்தானத்திடம்  ‘இப்படி ஆடு.. ஸ்டெப்ஸ் இப்படி போடு..’ என்று சீரியஸாக செய்து காட்ட, அதன்படி மீண்டும் மீண்டும்  ஆடிய சந்தானத்துக்கு  தனது சக்தி மொத்தமும் இழந்து  சோர்வு  அடைந்த பின்னர் தான் ஆர்யா வேண்டுமென்றே கலாய்ப்பதை கண்டுகொண்டார்.  சந்தானம் ஆர்யாவிடம் ‘ஐயா சாமி போதும் உங்க விளையாட்டு.. டைரக்டர் என்னை பிச்சி எடுக்கப்போறார்’  எனக்கூறி ஆர்யாவை படாத பாடு பட்டு அனுப்பி வைத்தாராம்.