“முதுகில் குத்துவது மடமையடா” – சிம்பு

சண்டைகளுக்கும் வம்புகளுக்கும் பெயர் போன வாலுப் பையன் சிம்புவின் போக்கில் புதிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. சிம்பு தற்போது கௌதமின் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் நடித்து வருகிறார்.  இந்த நேரத்தில் வெறுப்பு, நயவஞ்சகம், துரோகம் போன்ற எதிர்மறை எண்ணங்களுக்கு
எதிராக அவர் திடீரென்று  கிளம்பியுள்ளார்.

சிம்புவின் இதில் இணையவிருப்பவர் அவருடைய நெருங்கிய நண்பரான யுவன். அவரும் யுவனும் சேர்ந்து இந்த எதிர்மறை விஷயங்களிலிருந்து மக்கள் விடுபட ஒரு பாடலை வெளியிட இருக்கிறார்களாம். இது இணையதளத்தில் அவரது பக்கங்களில் கசிந்த செய்தி. இதை முதுகில் குத்தும் மனிதர்களுக்காக டெடிகேட் செய்ய இருக்கிறாராம் சிம்பு.

அன்றாட வாழ்வில் சந்திக்க நேர்நதவர்கள் பெரும்பாலும் முதுகில் குத்துபவர்களும், வெறுப்புடனேயே இருப்பவர்களும், நயவஞ்சகர்களும் நிரம்பிப் போனவர்களாகவே ஆகிப்போனதாலா அல்லது துரோகம் செய்து பாதியில் பிரிந்து போன காதலிகளாலா என்பது தெரியவில்லை.

மேலே இருக்கிற ஸ்டில் அச்சம் என்பது மடமையடா படத்தோட ஸ்டில் தான். அதைப் பாத்துட்டு சிம்பு சொன்னதுக்கும் இந்தப் ஸ்டில்லுக்கும் சம்பந்தமோன்னு நீங்க ஏதாவது கற்பனை பண்ணிடாதீங்க.  பாடல் வெளிவரட்டும் ஏதாவது க்ளூ கிடைக்கலாம்.