மிக சிறந்த நடிப்பின் அடையாளம் அது நடிப்பு என்பதை மறக்கடிப்பதே. தன் முழு திறத்தையும் நடிப்புக்கென அர்பணிப்பவர்களே இந்த நேர்த்தியை கற்கிறார்கள். ‘சுட்டகதை’, ‘இராண்டாம் உலகம்’ படங்களில் நடித்த ஸ்டெப் மணி அலயஸ் வெங்கி, தான் தற்போது நடித்துவரும் படமான ‘ மூணே மூணு வார்த்தை’ படத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்கிறார்.

“யூட்யூப்ல் ஸ்டெப் ஸ்டெப் மணி என்ற கதாப்பாத்திரமாய் என்னை பலருக்கும் தெரியும். அதில்  ஒரு கான்ஸெப்ட் எழுதி அதை நடிப்பதென்பது எளிதில் சாத்தியம். சினிமா என்பது ஒரு பெரிய கடல்,  இங்கே ஒரு காட்சிக்கு பல நபர்கள் சேர்ந்து உழைக்கிறார்கள். அதிக உழைப்பும் வேண்டும்.“

“இதுநாள் வரையில் நான் சினிமாவில் பயின்ற அனைத்து விஷயங்களைக் காட்டிலும் இப்படத்தில் அதிகமாக பயின்றுள்ளேன். இப்படத்தில் சிச்சுவேஷனல் காமெடி எனும் நகைச்சுவை பாணியை பயன்படுத்தியுள்ளோம். இது மக்களை கண்டிப்பாக மகிழ்விக்கும். இயக்குனர் மதுமிதா எங்களுக்கு முழு சுதந்திரம் தந்தார். கதை உருவாக்கம் முதல் திரையிடல் வரை அனைத்திலும் ஈடுபட வைத்தார்.”

“இப்படம் கண்டிப்பா இளைஞர்களுக்கு பிடிக்கும் செல்வராகவன் சார் இயக்கத்தில் நான் நடித்த “ இராண்டாம் உலகம் “ படத்தின் அனுபவங்கள் எனக்கு இந்த படத்தில் ஸ்பாட்டிலேயே காட்சிகளை மாற்றி நடிப்பதற்கு  பெரிதும் உதவியது. எஸ்.பி.பி. சார்,லக்ஷ்மி மேடம், பாக்கியராஜ் சார் போன்ற பெரிய நடிகர்களுடன் சேர்ந்து நடித்த போது ரொம்ப சந்தோஷமாய் இருந்தது. பாக்யராஜ் சார் படத்தில் எனது நடிப்பை பார்த்து பாராட்டினார். அது ரொம்ப பெருமையா இருக்கு. “ என்றார் வெங்கி.

Related Images: