கனவெல்லாம்  பலிக்குதே என்ற தல அஜீத்தின் பாடலில் வரும் என்னை விடஎந்தன் பிள்ளை  ஜெயிக்கிறதே, என்னை விட உயரத்தில் பறக்கிறதே என்ற வரிகள் ஜி வி பிரகாஷ் இசையில் வெளி வந்து ஹிட்டானது .  இன்று அதே ஜி .வி .பிரகாஷ் இசை  அமைத்து நாயகனாக நடிக்கும்  ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தின் இயக்குனர் ஆதிக் மற்றும் அப்படத்தில் உதவி இயக்குனராய் பணி புரியும் அவரது தந்தை ரவி கந்தசாமி ஆகியோர் இந்த வரிகளுக்கு பொருத்தமானவர்கள் ஆகிறார்கள்.

“அப்பா, எனது வாழ்க்கைல மிக முக்கியமானவர்.பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் சினிமா பார்க்க கூடாது என்று அதட்டுவார்கள். எனக்கு சினிமாவை உணர வைத்தவரே அவர்தான். பாரதிராஜா சார், செல்வமணி சார் இப்படி பல பேர்கிட்ட 16 வருடங்களாக உதவி இயக்குனராக பணி புரிந்து வருகிறார். அப்பாவின் போராட்டத்தையோ அவருடைய அங்கீகாரம் தடை படும் போதும்  எனக்குள்ள ஜெயிக்கனும் அப்படிங்கற வெறி வரும். அப்படி என்னோட பாதையை அப்பாவோட கனவை நிறைவேற்றவே தேர்ந்தெடுத்து இன்னிக்கு ஜீவி பிரகாஷ் குமாரிடம்  ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தின் கதையைக் கூறி இன்று என் முதல் படத்தை இயக்கி வருகிறேன.  ஒரு நாள் என் அப்பாவும் ஒருப் படம் இயக்குவார் தேவை பட்டால் அன்று நான் அவரிடம் உதவி இயக்குனராவேன்” என்று தன் அப்பா கனவை நினைவேற்றிய சந்தோஷத்துடன் கூறினார் அறிமுக இயக்குனர் ஆதிக்.

“ ஆதிக் வளரும் போதே நான்  தன்னம்பிக்கையும் தைரியத்தையும் அதே அளவுக்கு சினிமா ஆர்வத்தையும் கற்றுக் கொடுத்தேன்.அப்பனுக்கு பாடம் தந்த சுப்பனைப் போல் என் மகனை நான் பாவிக்கிறேன். நான் ஜெயிக்க வேண்டும் என்பது கனவு , என் மகன் ஜெயிக்க வேண்டும் என்பது மாபெரும் கனவு. என் கனவு கனவாகவே நின்றுவிட்டது. ஆனால் மாபெரும் கனவு சாத்தியமாகிவிட்டது. ஆதிக் இயக்குனரானது என் மனைவிக்கு மிகப் பெருமை ஒரு அம்மாவாக; எனக்கும் தான் ஒரு அப்பாவாக. ” என்று பெருமிதத்தோடு கூறினார் ரவி கந்தசாமி.

மகனை பெருமைப்படுத்தும் அப்பா.. அப்பாவை பெருமைப்படுத்தும் மகன்..

Related Images: