ஹிட்டடிக்கும் காஞ்சனா – 2

ராகவா லாரன்ஸ் முனி, காஞ்சனா வெற்றியைத் தொடர்ந்து நடித்து வெளியிட்ட காஞ்சனா 2 வசூலை அள்ளிக் குவிக்கிறதாம். இதுவரை வெளிவந்த தகவல் படி 4 நாட்களில் சுமார் 20 கோடிகள் வசூலித்துவிட்டதாம்.

சன் பிக்சர்ஸூடன் இணைந்து ராகவா லாரன்ஸின் தேனான்டாள் பிலிம்ஸ் தயாரித்து வெளியிட்டிருக்கும் படம் இது. வழக்கம் போலவே ராகவா லாரன்ஸ் காமெடி கலந்த த்ரில்லராக கொடுத்திருக்கிறார்.

கோடை விடுமுறை என்பதால் காலைக் காட்சிகளும் கூட்டத்தை அள்ளுகின்றனவாம். இப்படத்தில் ப்ளஸ்ஸாக இருப்பவர் நாயகி டாப்ஸி பன்னு. அவருடைய பேய் நடிப்பை பார்த்து ஆடியன்ஸ் கதிகலங்கி நிற்கிறார்களாம். அவரே ட்விட்டரில் சந்தோஷமாக சொன்ன செய்தி இது.