இது என்ன ஆண்ட்டிகள் வாரமா ? சிம்ரனைத்தொடர்ந்து ஜோதிகா செய்தியை எழுதவேண்டி இருக்கிறது.

ரோஷன் ஆன்ட்ரூஸ் இயக்கி மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியடைந்த ஹவ் ஓல்ட் ஆர் யூ படத்தின் ரீ-மேக்கான ’36 வயதினிலே’ படப்பிடிப்பு முடிந்து ஆடியோ ரிலீஸுக்கும் தயாராகிவிட்டார்கள் .

நீண்டஇடைவேளைக்கு பிறகு ஜோதிகா நடிப்பதால் ரசிகர்கள் மத்தியில் 36 வயதினிலே படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கிறது.

படம் எப்ப வரும் என்று பலரும் ஆவலோடு காத்திருக்க..

36 வயதினிலே படத்தின் ஆடியோவை ஏப்ரல் 1-ஆம் தேதி அன்று வெளியிட இருப்பதாக முதலில் தகவல் வெளியானது.

பின்னர் இந்த திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.

அதாவது, ஏப்ரல் 1-ஆம் தேதி அன்று 36 வயதினிலே படத்தின் ஒரு பாடலை மட்டும் அதாவது ராசாத்தி என்ற பாடலை மட்டும்.. வெளியிட இருப்பதாகவும், ஏப்ரல் 5-ஆம் தேதி அன்று 36 வயதினிலே படத்தின் மொத்த பாடல்களையும் வெளியிட இருப்பதாகவும் சொல்லப்பட்டது!

36 வயதினிலே படத்தின் இசைவெளியீடு தொடர்பாக காதில் விழுந்த எந்தவொரு விஷயமும் கொம்பன் படத்துக்கு ஏற்பட்ட பிரச்சனை காரணமாக நடைபெறவில்லை.

கொம்பன் பிரச்சனைகள் ஓய்ந்து படமும் ரிலீஸ் ஆகி தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் 36 வயதினிலே படத்தின் இசைவெளியீட்டை ஏப்ரல் 6 ஆம் தேதி நடத்த தீரமானித்துள்ளனர்.

சென்னையில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டலில் 36 வயதினிலே படத்தின் இசைவெளியீடு படு பிரம்மாண்டமாக நடைபெற நடைபெற உள்ளது.

இப்பட ரிலீஸுக்குப்பின் மாமனார் எவ்வளவு எதிர்தாலும் தொடர்ந்து நடிப்பது என்பதில் உறுதியாக இருக்கிறாராம் ஜோ.36 வயதினிலே அல்ல 63 வயதினில் நீங்க நடிச்சாலும் நாங்க பாக்கத்தயார் ஜோ.

 

Related Images: