நடிகர் சூர்யா தனது 2டி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் , விக்ரம் குமாரின் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைப்பில் ’24’ என்கிற படத்தில் நடிக்க இருக்கிறார். படத்தின் ஆரம்பக்கட்ட தயாரிப்பு வேலைகள் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

பாலிவுட் நடிகர் அனில் கபூர் ’24’ என்கிற பெயருடைய அமெரிக்க சீரியலை 20யத் செஞ்சுரி பாக்ஸிடம் உரிமம் வாங்கி ஹிந்தியில் டப் செய்து கலர்ஸ் டிவியில் தொடராக வெளியிட்டுள்ளார். வெற்றிபெற்ற அந்த தொடரின் அடுத்த சீஸனை டப் செய்து விரைவில் வெளியிட இருக்கிறார்.

ஒருநாள் சூர்யாவின் ’24’ பட விளம்பரத்தை தற்செயலாகப் பார்த்த அனில் கபூர் அந்த 24 அப்படியே அவரது டிவி சீரியல் 24ஐப் போலவே  தலைப்பும் லோகோவும் ஒரே மாதிரி அச்சு அசலாக இருப்பதைப் பார்த்து அசந்து(அதிர்ந்து?!) போய்விட்டாராம்.

சூர்யாவை இது விஷயமாக போன் செய்து விபரத்தைச் சொல்லி இது பாக்ஸ் சர்வதேச டிவியின் உரிமைகள் பெற்ற சீரியல் எனவே உங்கள் படத்தின் தலைப்பு மற்றும் லோகோவை மாற்றிக்கொள்ளுங்கள் இல்லாவிட்டால் சட்டரீதியாக நானோ அல்லது பாக்ஸ் டி.வி.யோ நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது என்று ‘அன்பாக’ச் சொல்லிவிட்டார்.

கூடிய விரைவில் சூர்யாவின் 24 படத்தின் தலைப்பும் அதன் டைட்டில் லோகோ டிசைனும் மாறும் என்று தெரிகிறது. கொரியன் படம் இல்லாட்டி ஏதாவது வேறு நாட்டு உலகப்படம் என்று காப்பியடித்தால் கண்டுக்க ஆளே இல்லை. நம்ம நேரம் !! அதே சீரியல் இந்திக்கும் டப்பிங் ஆனா நாம என்ன செய்யிறது பாஸ் ?!

Related Images: