146 கோடியைத் தொட்ட பாஸ்ட் அன்ட் ப்யூரியஸ் 7

ஹாலிவுட் சினிமா உலகெங்கிலும் உள்ள லோக்கல் சினிமாக்களை மெது மெதுவாக காலி செய்ய ஆரம்பித்திருக்கிறது. அதன் புதிய அறிகுறி பாஸ்ட் அன்ட் ப்யூரியஸ் அடைந்திருக்கும் வெற்றி.

உலகின் பல மொழிகளிலும் வெளியிடப்பட்ட பா.அன்ட்.ப்யூ 7 வெளியிடப்பட்ட 17 நாட்களிலேயே இதுவரை இல்லாத அளவு 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்துள்ளது. இதற்கு முந்தைய ரெக்கார்ட், 1 பில்லியன் டாலர்கள் 19 நாட்களில் அவன்ஜெர்ஸ் படத்தால் வசூலிக்கப்பட்டது தான்.

பாஸ்ட் அன்ட் ப்யூரியஸ் இந்தியாவிலும் பல மொழிகளிலும் டப் செய்து வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் வசூல் மட்டும் 146 கோடி ரூபாயாம். சங்கரின் எந்திரன், சிவாஜி பட வசூல்களையெல்லாம் இது சாதாரணமாக தாண்டிவிட்டது.

இதில் நடித்திருக்கும் பால் வாக்கர் தற்செயலாக ஒரு கார் ஆக்ஸிடெண்ட்டில் இறந்து போனது படத்தின் வெற்றிக்கு இன்னொரு காரணம். பால் வாக்கரின் கேரக்டரை படத்தில் சாகடிக்காமல் அவரது தம்பியை நடிக்க வைத்து கிராபிக்ஸ் செய்து பால் வாக்கர் போலவே மாற்றியிருக்கிறார்களாம்.