‘படம் மாபெரும் வெற்றி. வசூலை வாரிக்குவிக்கிறது’ என்றபடி சக்சஸ் மீட் வைத்துவிட்டு, அதே மீட்டிங்கில் தனக்கு மாபெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதால் புதிய தமிழகம் கிருஷ்ணசாமியிடம் நஷ்ட  ஈடு பிச்சை கேட்கிறார் ’கொம்பன்’ ஞானவேல் ராசா.

கார்த்தி, லட்சுமி மேனன் நடிக்க முத்தையா இயக்கத்தில் உருவான ‘கொம்பன்’ திரைப்படத்தில் சாதி பிரச்சினை இருப்பதாகக் கூறியும், இந்தப் படம் வெளியானால் தென் மாவட்டங்களில் சாதிக் கலவரமே ஏற்படும் என்றும் ‘புதிய தமிழகம்’ கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.

அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டாலும் 2 காட்சிகள் தாமதமாகத்தான் படம் வெளியானது. இதனால் தங்களுக்கு மிகப் பெரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தெரிவித்துள்ளார்.

‘புதிய தமிழகம்’ கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியிடம் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்திருப்பதாக ‘கொம்பன்’ தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.

கார்த்தி, லட்சுமி மேனன் நடிக்க முத்தையா இயக்கத்தில் உருவான ‘கொம்பன்’ திரைப்படத்தில் சாதி பிரச்சினை இருப்பதாகக் கூறியும், இந்தப் படம் வெளியானால் தென் மாவட்டங்களில் சாதிக் கலவரமே ஏற்படும் என்றும் ‘புதிய தமிழகம்’ கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.

அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டாலும் 2 காட்சிகள் தாமதமாகத்தான் படம் வெளியானது. இதனால் தங்களுக்கு மிகப் பெரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று காலை பிரசாத் கலர் லேப்பில் நடைபெற்ற கொம்பன் திரைப்படத்தின் சக்ஸஸ் பிரஸ்மீட்டில் ஞானவேல்ராஜா இது பற்றி பேசுகையில், “இந்தப் படத்துக்கு தடை கேட்ட கிருஷ்ணசாமி ஸார் வெறும் அம்புதான். பின்னணியில் அரசியல் கலந்திருக்கிறது. அவருடைய எதிர்ப்பால் சுமார் 120 திரையரங்குகள் குறைவாகத்தான் கிடைத்தன. படம் இப்போது நல்லபடியாக ஓடுவதால் வரும் புதன்கிழமை முதல் திரையரங்குகளை அதிகரிக்க இருக்கிறோம்.

அதுமட்டுமன்றி, கிருஷ்ணசாமியின் எதிர்ப்பால் வெளிநாட்டுக்கும் சரியான நேரத்தில் எங்களால் படத்தை அனுப்ப முடியவில்லை. படத்தை தாமதமாக அனுப்பினால், அதற்கான பணத்தை கழித்துக் கொண்டுதான் கொடுப்போம் என்று ஒப்பந்தத்தில் இருக்கிறது. அந்த பணத்தையும் ஒப்பந்தப்படி கழித்துவிட்டுத்தான் மீதியை அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

மதுரைக்கு சென்று வர விமான டிக்கெட் செலவு.. ஒரு டிக்கெட் 16000 ரூபாய்.. பல நாட்கள் அலைந்திருக்கிறோம். வழக்கறிஞர்களுக்கான செலவு. படம் பார்க்க பிரிவியூ தியேட்டருக்கு வந்த நீதிபதிகளுக்கு தலா 2 லட்சம் ரூபாய் கட்டணம்.. கிருஷ்ணசாமியின் வழக்கறிஞர்களுக்கும் உரிய கட்டணம்.. இப்படி பலவிதங்களில் பணம் தண்ணீராய் செலவானது. இதனால் நாங்கள் நிறைய பண இழப்பை சந்தித்திருக்கிறோம். இவை எல்லாவற்றையும் கணக்கில் கொண்டுதான் அவரிடம் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கிறேன்.

படத்தின் பிரச்சினை முடிந்துவிட்டாலும், எனக்குப் பிரச்சினை துவங்கிவிட்டது. இந்தப் பிரச்சினை எழுந்தபோது நான் சென்றது 3 இடங்களுக்குத்தான். முதலில் எனது தந்தையிடம்.. அடுத்து கோவிலுக்கு.. அங்கு சென்று ஆண்டவனிடம் முறையிட்டேன். கடைசியாக பத்திரிகையாளர்களாகிய உங்களிடம்தான் வந்தேன்.

நீங்கள் கொடுத்த ஒத்துழைப்பு மற்றும் உதவியுடன்தான் இந்தப் பிரச்சினையை எளிதாகக் கடந்தேன். உங்களக்கு படத்தை போட்டுக் காட்டிய பின்புதான் நான் கொஞ்சம் ரிலாக்ஸானேன்.. இனியும் இது தொடர்பாக எனக்கு ஏதாவது பிரச்சினை வந்தால்… நிச்சயம் உங்களிடம்தான் ஓடி வருவேன். நீங்கள்தான் எனக்கு உதவ வேண்டும்..” என்றார்.

‘நீ எப்படிப்பட்ட பச்சோந்தி. இதே வாயால பத்திரிகையாளர்களைப்பத்தி என்னவெல்லாம் கமெண்ட் அடிச்சிருக்கேன்னு எல்லாருக்கும் தெரியும் ராசா. அதனால இந்த டகால்டி வேலையெல்லாம் வேணாம்.

 

Related Images: