’நான் அண்ணன் பாஸ்கர் மற்றும் பாரதிராஜோவோடு சென்னை வந்தபோது முதலில் போய் நின்ற இடம் ஜெயகாந்தனின் வீடுதான். ‘உங்களை நம்பித்தான் சென்னை வந்திருக்கிறோம் என்ற போது கோபப்பட்டு என்னை நம்பி எப்படி வரலாம். உங்கள் மீதுள்ள நம்பிக்கையில் அல்லவா வந்திருக்க வேண்டும் என்று செல்லமாக கோபித்துக்கொண்டு எங்களை அரவணைத்தவர் ஜெயகாந்தன்.

தன்னுடைய வலிமையான எழுத்துக்கள் மூலம் எளிய மனிதர்களின் குரலை உலகெங்கும் ஒலிக்கச்செய்தவர். தமிழ் எழுத்துலகில் மட்டுமல்லாமல் திரையுலகிலும் தனக்கென தனி முத்திரை படைத்தவர்.

தமிழ் எழுத்துலகின் புத்துணர்ச்சிக்கு பெரிதும் காரணமாக இருந்தார். புதிய  படைப்பாளிகளுக்கான கலங்கரை விளக்காவும் திகழ்ந்தார். தற்கால தமிழ் இலக்கியத்திற்கும் தமிழர்களுக்கும் அவர் செய்த தொண்டு மறக்கமுடியாதது. தமிழர்களின் தலநிமிர்வு ஜெயகாந்தன். அவஎ என்றென்றும் தமிழர்களின் நெஞ்சங்களில் நீங்காமல் நிறைந்திருப்பார்’.

Related Images: