‘மதுரை மா வேந்தர்கள்’

‘நேற்று இன்று’, ‘இரவும் பகலும்’ உள்ளிட்ட படங்களை பெரியளவில் வெளியிட்ட நிறுவனம் ஆர்.எஸ்.எஸ் பிக்சர்ஸ், தற்போது ‘மதுரை மா வேந்தர்கள்’ என்ற படத்தை தயாரித்திருக்கிறது.

நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் தன் மகளின் திருமணத்திற்காக வீட்டை விற்று வைத்திருந்த பணத்தை ஒரு அரசியல்வாதியிடம் கொடுத்து ஏமாந்து விடுகின்றார்கள். அந்த பணத்தை எப்படி கதாநாயகனும் அவனது நண்பர்களும் மீட்டெடுத்தார்கள் என்பதை முழுக்க முழுக்க நகைச்சுவையுடன் படக்கியுள்ளார் இயக்குனர் வி.கே. விஜய் கண்ணா. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. மே மாதம் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

படம் பெயர்ல ‘மா’ க்கு பதிலா ‘மூ’ இருந்தா வேற அர்த்தம் வர்றமாதிரி இருக்கே.. !! கொம்பர்கள் ஜாக்கிரதைங்கோ ..

நடிகர்கள்:
அஜய், அர்ச்சனா, அப்புக்குட்டி, ‘காதல்’ சுகுமார், தேவதர்ஷினி, விஜய் ஆனந்த், P. பாண்டு, ‘பூ விலங்கு’ மோகன், ‘நெல்லை’ சிவா, ‘மேனேஜர்’ கிருஷ்ண மூர்த்தி, வெங்கல் ராவ், சபர்ணா