ஓநாயும் ஆட்டுக்குட்டியும்

‘கற்றது தமிழ்’ ராமின் அடுத்த படத்திற்கான திரைக்கதை ரெடியாகிவிட்டதாகவும் அதில் மம்மூட்டியை நடிக்க வைக்க யோசிப்பதாகவும் பேச்சுக்கள் அடிபடுகின்றன. படத்தின் நாயகியாக அஞ்சலி அல்லது ஆண்ட்ரியா நடிக்கலாமென்றும் இசையமைப்பு வழக்கம் போலவே யுவனிடம் தான் என்றும் சொல்கிறார்கள்.

ராம் தரப்பிலோ திரைக்கதை மட்டுமே ரெடியாகி இருப்பதாகவும் மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு இன்னும் முடிவாகவில்லை என்றும் கூறுகிறார்கள். தலைப்பு கூட இறுதியாகவில்லை. ஆனால் அக்டோபர் மாதம் படப்பிடிப்பு ஆரம்பிக்கலாம்.

இந்த நேரத்தில் இன்னொரு முடிவான விஷயம் நடந்திருக்கிறது. ராமிடம் இயக்குனர் மிஸ்கின் தனது திரைக்கதையை கொடுத்து படிக்கச் சொன்னாராம்.  அதில் பிரதான பாத்திரத்தில் ராமை நடிக்க அழைப்பும் விடுத்தாராம். ஸ்கிரிப்டை படித்த ராம் உடனே ஓ.கே சொல்லிவிட்டார்.

மிஸ்கினின் நண்பரான ஆதித்யாவின் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்தப் படத்தில் ராம் ஹீரோவாகவும் மிஸ்கின் வில்லனாகவும் நடிக்கிறார்களாம்.

மிஸ்கின் ஓநாயும் ராம் ஆட்டுக்குட்டியும்..