இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் தனது கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த படங்களில் சிறிது சோஷலிச கருத்துக்களையும் சொல்ல முயற்சிப்பவர். அவர் இயக்கும் அடுத்த படம் புறம்போக்கு என்கிற பொதுவுடைமை.

பொதுவுடைமைக்கு புதிய கோணத்தில் விளக்கம் சொல்லும் டைட்டிலே இது அரசியல் கருத்துக்கள் நிறைந்திருக்கும் படம் என்று வெளிச்சம் காட்டுகிறது.  சுமார் ஒரு வருடமாக நடந்துவரும் படப்பிடிப்பு வேலைகள் தற்போது நிறைவடைந்துள்ளன.

ஆர்யா, விஜய் சேதுபதி,  ஷாம் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். படத்திற்கு இசையமைத்திருப்பவர் லண்டன் ட்ரினிட்டி இசைக் கல்லூரியிலும், சென்னை இசைக் கல்லூரியிலும் இசை பயின்ற புதுமுக இசையமைப்பாளர் வர்ஷன்.

படத்தின் டீஸர் போன வருடம் ஆகஸ்ட் மாதமே வெளியிடப்பட்டது. படத்தின் இசை இந்த மாதமும் படம் மே மாதம் ஒன்றாம் தேதியும் வெளியிடப்பட இருக்கின்றன. யுடிவி நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.

Related Images: