‘சினிமாவில் உள்ள எல்லா டெக்னீஷியன்களுக்குமே ஒரே ஒரு படத்தையாவது இயக்கிவிடவேண்டும் என்ற ஆசை இருக்கும். அந்த வகையில் படம் இயக்க வந்தவன் தான் நான்’ என்கிறார் ‘கராத்தேகாரன்’ மூலம் இயக்குநர் கோதாவில் குதிக்கும் ஸ்டன் சிவா.

இந்தப் படத்தை அவருடைய மனைவியான லானி ஹு தயாரிக்கிறார்.

ஸ்டன் சிவா – லானி ஹு தம்பதியின் மகன்களான கெவின், ஸ்டீவன் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

தயாரிப்பாளர் லானி ஹுவும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார்.

மற்றும் நந்தா பெரியசாமி, ரோகிணி, அந்தோணிதாசன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

ஏ.ஆர்.ரகுமான் உட்பட பல இசையைமப்பாளர்களிடம் கிடாரிஸ்ட்டாகப் பணியாற்றி கெபா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

ஜாக்கி சான் நடித்து சில வருடங்களுக்கு முன் வெளியான ‘கராத்தே கிட்’ படத்தைப் பார்த்தபோதுதான் இப்படி ஒரு படத்தை தமிழில் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஸ்டன் சிவாவுக்கும், அவர் மனைவி லானிக்கும் வந்ததாம்.

உடனே, அதே மாதிரியான ஒரு கதையை எழுதும்படி மனைவி லானியிடம் கேட்டிருக்கிறார் சிவா. ஆனால், படத்தில் சிறுவனாக நடிக்கும் கதாபாத்திரத்தை மட்டும் ஏழையாக வைக்கும்படி கேட்டுக் கொண்டாராம்.

அப்போதே இந்தப் படத்தின் கதையை எழுத ஆரம்பித்துவிட்டேன் என்கிறார் லானி.

கராத்தேயில் பிளாக்பெல்ட் வாங்கியுள்ள இவர் தன்னுடைய மகன் 7 வயதாக இருக்கும்போதே காலை அனாயாசமாக தூக்கி நிறுத்துவானாம், அதைப் பார்த்ததும் தன் மகனுக்கு மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சியையும் கொடுக்க ஆரம்பித்துள்ளார்.

அப்ப தமிழ் சினிமாவுக்கு ஒரு ஆக்‌ஷன் ஹீரோ ரெடின்னு சொல்றீங்க.

 

Related Images: