சைவம் படத்தில் நடித்த வித்யா பிரதீப் தற்போது கைவசம் நிறைய படங்கள் வைத்திருக்கிறார். அதில் நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் வெளிவரும் ஹைக்கூவும் ஒன்று.  படத்தில் நடித்தது பற்றி ஆர்வமாய் படபடக்கிறார் வித்யா.

“ஹைக்கூ படத்தில் எனக்கு பெர்மான்ஸ் உள்ள ரோல். நான் சூர்யா சாரின் பரம விசிறி. ஹைக்கூவில் கெஸ்ட் ரோலில் நடிப்பதற்காக சூர்யா சார் செட்டுக்கு வந்தபோது தான் அவரை நேராகப் பார்த்தேன். அன்றே அவருடன் நடிக்கவும் செய்தபோது ரொம்ப சந்தோஷமாயிருந்தது. பெரிய நடிகர் என்கிற பந்தா எதுவுமின்றி என்னிடம் இயல்பாகப் பேசினார். எனது நடிப்பை பாராட்டினார்” என்றார்.

ஸ்டெம் ஸெல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பி.ஹெச்.டி மாணவியான வித்யா இப்போது அசுரகுலம், தலைகால் புரியல, ஜீவனுக்கு ஜோடியாக அதிபர் படத்தில், சமுத்திரக்கனியின் அடுத்த படத்தில் என்று கைவசம் பல படங்களை வைத்திருக்கிறார். அதனால் பி.ஹெச்.டியை இன்னும் பத்து வருடத்திற்குள் முடிப்பாரா என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் வருத்தமும் கவலையும் எழுந்துள்ளது.

ஒரு படிக்குற புள்ளைய இப்படி சினிமாவுல நடிக்க வெச்சி சமூகத்துக்கு ஒரு விஞ்ஞானிய வரவிடாம பண்ணிட்டீங்களே !! இது ஞாயமா?

Related Images: