மௌனகுருவின் அடுத்த இரு படங்கள்

அருள் நிதி நடித்த மௌனகுருவுக்குப் பின் வந்த தகராறும், 1 கன்னி 3 களவாணிகள் படமும் எதிர்பார்த்த அளவு போகவில்லை. ஆனாலும் என்ன ? அப்பா தான் புரொட்யூசராச்சே !! இந்த மேமாதம் தொடர்ந்து இரு படங்களில்  களமிறங்குகிறார் இந்த உயரமான நடிகர்.

முதலில் வெளியாக இருப்பது ‘டி மான்ட்டி காலனி’. இரண்டு மணி நேரப் படமான இது ஒரு த்ரில்லராம். படம் முடிவடைந்து சென்சார் போய் யு ஏ சர்டிபிகேட் வாங்கியிருக்கிறது. படத்தின் ஆடியோ 15ம் தேதி என்று சொல்லியிருக்கிறார்கள்.   படம் 22ம் தேதி ரிலீஸாகும்.

அதற்குப் பின் 2 வாரம் கழித்து அஜய் கிருஷ்ணமூர்த்தியின் இயக்கத்தில் ரம்யா நம்பீசன், அருள்நிதி ஜோடியில், நாலு போலீஸூம் நல்லா இருந்த ஊரும் ரிலீஸாகிறது.