சந்தானமும் ஒரு வேலையில்லா பட்டதாரி ?!

புதுமுக இரட்டை இயக்குனர்கள்  பிரேம் ஆனந்த், முருகன் ‘முருகானந்த்’ என்ற ஒரே பெயரில் இயக்குனர்களாக அறிமுகம் ஆகிறார்கள்.
படம் – சந்தானம், ஆஷ்னா சவேரி, அகிலா கிஷோர் நடிக்கும் ‘இனிமே இப்படித்தான்’.

சந்தானத்திடம் இவர்கள் மூன்று கதைகள் சொல்லியபோது மூன்றுமே அவருக்குப் பிடித்துவிட்டதாம். கடைசியில் இரண்டு ஹீரோயின்கள் கொண்ட காமெடி படமான இனிமே இப்படித்தானுக்கு ஓ.கே. சொல்லி ஸ்டார்ட்டும் பண்ணிவிட்டார்.
“ஐந்து ஆறு வருடங்களுக்கு முன் அவரது படத்தில் எங்களை இயக்குனர்களாக அறிமுகப் படுத்துவேன் என்றுக் கூறினார் சந்தானம். சொன்ன வார்த்தையை நிறைவேற்றியிருக்கிறார் இன்று. “ என்று நன்றியில் தழுதழுக்கிறார் இயக்குனர்களில் ஒருவரான பிரேம் ஆனந்த்.

படத்தில் அழகான பெண்ணை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் திரியும் வேலையில்லாத இளைஞனாக வருகிறார் சந்தானம். ஆஷ்னா சவேரி, அகிலா கிஷோர் என இரண்டு கதாநாயகிகளை டாவடிக்கிறார். தம்பி ராமையா, பெப்ஸி விஜயன், பிரகதி, நரேன், விடிவி கணேஷ் போன்றவர்கள் அவர் டாவடிக்க துணை நடிக்கின்றனர்.
மற்ற ஹீரோக்களின் படங்களில் சந்தானம் ஹீரோக்களுக்கு காதல் ஆலோசகராக வருவாரே அதே போல இவர் படத்தில் இவருக்கு காதல் ஆலோசனை சொல்ல வருகிறவர் விடிவி கணேஷ்.
மொத்தத்தில் இது வழக்கமான மசாலா நிறைந்த ரொமாண்டிக் காமெடி படம்.