அமரன் 2வில் கார்த்திக்

சென்னையில் ‘அமரன் 2’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. சொன்ன நேரத்திற்கு வந்து ஆச்சரியப்படுத்தினார் கார்த்திக். நரை திரை விழுந்த எபக்டே தெரியாமல் இளமைத் துள்ளலாய் இன்னும் தெரிந்தார்.

‘அமரன் 2’ படத்தின் புகைப்படங்களில் 1992ம் ஆண்டு வெளிவந்த ‘அமரன்’ படத்தில் இருப்பதைப் போன்றே இப்போதும் தெரிகிறார் நவரச நாயகன் கார்த்திக்.

ராஜேஷ்வரின் இயக்கத்தில் வந்து ஒரு தாதா படமான அமரன் ஓடியது அதன் வித்தியாசமான ஒளிப்பதிவு மற்றும் காட்பாதர் ஸ்டைல் மேக்கிங் மற்றும் நாயகன் டைப் கதைக்காக. இப்போது அமரன்-2 வை இயக்கப்போவதும் ஸேம் ராஜேஷ்வர்.

23 வருடங்கள் கழித்து ‘அமரன் 2’ படத்தை உருவாக்கக் காரணம் என்ன என்று இயக்குனரைக் கேட்ட போது,

“அமரன்’ படம் வெளிவந்த சில வருடங்களுக்குள்ளாகவே இரண்டாம் பாகத்தை இயக்கும் எண்ணம் இருந்தது. சில காரணங்களால அது தள்ளிப் போய்க்கிட்டே இருந்தது.
‘அமரன்’ படத்தைப் பத்தி பல பேர் என் கிட்ட பேசியிருக்காங்க. அந்தப் படம் வந்த போது நான் ஸ்கூல்ல படிச்சிட்டிருந்தேன், காலேஜ்ல படிச்சிட்டிருந்தேன்னு சொல்வாங்க.
‘அமரன்’ படம் ஒரு பெரிய பரப்புல அமைஞ்சது. அதுக்கான சரியான களம் இரண்டாவது பாகத்துக்குக் கிடைக்கணும். அது பற்றி யோசிச்சிட்டிருந்தப்போ ஒரு அருமையான களம் இப்ப அமைஞ்சது. உடனே ஆரம்பிச்சுட்டோம்” என்றார்.

இந்தப் படம் பொருள் பொதிந்த பல விஷயங்களைச் சொல்ற படமா ‘அமரன் 2’ படம் அமையும். என்னைப் பொறுத்தவரை கார்த்திக் உலக நடிகர்களின் வரிசையில் இடம் பிடிக்கக் கூடிய அளவுக்கு இருக்கிறவருங்கறது என்னோட கருத்து,” என்றார்.

60 வயதில் கமல், ரஜினி போன்ற மெகா ஸ்டார்களே இன்னும் ஹீரோக்களாக நடிக்கும்போது ஏன் கார்த்திக் நடிக்கமுடியாது ?