31 வயது ஆர்த்தி அகர்வால் மரணம்

தெலுங்கு மற்றும் தெலங்கானா படவுலகுகளில் கடந்த 10 ஆண்டுகளாக டாப் ஹீரோயினாக வலம் வந்த ஆர்த்தி அகர்வால் அமெரிக்காவில் நியூஜெர்சியில் ஒரு தெலுங்குக் குடும்பத்தில் பிறநதவர்.

2001ல் வந்த  ‘நுவ்வு நாக்கு நச்சாவு’ என்கிற தெலுங்குப் படம் ஆர்த்தியை தெலுங்கில் நம்பர் ஒன்களில் ஒன்றாக மற்றிவிட்டது. வருடத்துக்கு 4 படங்கள் நடித்து வந்த அவருக்கு 2007க்குப் பின் மார்க்கெட் சரிந்தது.

ஒரு அமெரிக்க வாழ் எஞ்சினியரை திருமணம் செய்துகொண்ட ஆர்த்தி 2 வருடங்களில் விவாகரத்து வாங்கிக்கொண்டார்.  தன் மார்க்கெட்டை திரும்ப மீட்கும் முடிவுகளில் இருந்தார் ஆர்த்தி.

எனவே உடல் மெலிவதற்காக லிப்போசக்ஷன் எனப்படும் கொழுப்பு குறைப்பு அறுவை சிகிச்சை செய்துகொண்டார் ஆர்த்தி. ஆனால் அதன் பிறகு அவருக்கு உடல் உபாதைகள் தோன்றியுள்ளன. அவருக்கு ஏற்கனவே ஆஸ்துமா இருந்திருக்கிறது.

சில தினங்களுக்கு முன்பு அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு அது தொடர்ந்து மாரடைப்பாக மாறி அவர் உயிரைப் பறித்துவிட்டது என்கிறார்கள். லிப்போசக்ஸன் காரணமில்லை என்கிறார்கள்.

தெலுங்கு சினிமாவில்  ஆர்த்தி போல உரித்துக் காட்டப்பட்டு கவர்ச்சியாலேயே நிறைய படங்கள் நடித்து பின்பு 6-7 வருடங்களிலேயே ஒதுக்கப்பட்ட நாயகிகள் ஏராளம்.