புதுமுக இயக்குனர் கே.எஸ். பிரகாஷ் இயக்கவிருக்கும் படத்தில் ஆர்யாவும், அனுஷ்காவும் மீண்டும் இணைகிறார்கள். ஏற்கனவே இணையத்தில் அவர்களிருவரும் நடித்து வெளியானதாக கூறப்படும் ஆபாச வீடியோவில் நடித்தது அவர்கள் இல்லை போலிகள் என்பதை உறுதிப் படுத்த இந்தப் படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். படத்தின் பெயர் ‘இஞ்சி இடுப்பழகி’.

மெல்லிய அழகான உடலமைப்புக்கு இந்தக் கால இளசுகள் எப்படி ரிஸ்க் எடுக்கிறார்கள் என்பதை காமெடியாக விவரிக்கும் படம். படத்தில் ஆர்யா ஒரு உடற்பயிற்சி நிபுணராக வருகிறார். சமீபத்தில் நடந்த சர்வதேச சைக்கிள் பந்தயத்தில் வெற்றி பெற்ற ஆர்யா அந்தப் பந்தய காட்சிகளையும் படத்தில் இணைக்கிறாராம்.

நகைச்சுவை கலந்த காதல் கதைக்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு, மரகதமணி – இசை, இயக்குனர் ராகவேந்திர ராவின் மகன் கே.எஸ் பிரகாஷ் – இயக்குனர். ஆர்யா எப்படி பாடம் எடுக்கிறார் என்பதை விரைவில் திரையில் கண்டுகளியுங்க.

Related Images: