சண்டி வீரனும் ஆனந்தியும்

இந்தப்பூனையும் கருவாடு சாப்பிடுமா? என்று கேட்குமளவுக்கு அப்பாவியாய் இருந்த அதர்வா குறித்து பல அதிர்வான தகவல்களை உதிர்க்கிறார்கள் ‘சண்டிவீரன்’ படக்குழுவினர்.

பாலா தயாரிப்பில் சற்குணம் இயக்கிவரும் ‘சண்டி வீரன்’ படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடிக்கிறார். படப்பிடிப்பில் நல்ல பிள்ளையாய் நடந்துகொள்ளும் அதர்வா ஷூட்டிங் முடிந்தபிறகு ஆனந்தியிடம் காதல் கணைகளை வீச ஆரம்பித்தாராம். கூட நடிக்கிற ஹீரோ, யாரிடமும் புகார் சொன்னால் அடுத்து வரும் வாய்ப்புகள் பறிபோகக்கூடும் என்ற பயத்தில் ஆரம்பத்தில் அமைதி காத்த ஆனந்தி, வேறு வழியின்றி தனது நட்பு வட்டாரத்தின் மூலம் பாலாவுக்கு தகவல் பரிமாற்றம் செய்தாராம்.

அதற்கு பாலா என்ன பதில் சொன்னாராம் தெரியுமா?

‘நல்ல பையன் பேசாம கட்டிக்கவேண்டியதுதான?’ – இது பாலாவின் பதில்.

’அவர் கட்டிக்க ஆசைப்படுறாரா இல்ல வெறுமனே கட்டிப்புடிக்க ஆசைப்படுறாருன்னு தெரியலையே?’  என்று வெள்ளந்தியாய் முழித்துக்கொண்டிருக்கிறாராம் ஆனந்தி.