மிஸ்டர்.. மிஸ்.. அன்ட் மிக்ஸ்

ஒரு மாதத்திற்கு முன்பு ஆக்ஸ்போர்டு ஆங்கில டிக்ஷனரி தனது அடுத்த டிக்ஷனரி பதிப்பில் மிஸ்டர் மற்றும் மிஸ் என்று ஆண்களையும், பெண்களையும் மரியாதையாக விளிக்கும் வார்த்தைகள் போல திருநங்கைகளைக் குறிக்கும் சொல்லாக மிக்ஸ்(Mx) என்ற சொல்லை சேர்க்கப்போவதாக கூறியிருந்தது.

அதை செயலில் நடத்திக் காட்டிவிட்டது ஹைதாராபாத்திலிருக்கும் நல்சார் (Nalsar) சட்ட பல்கலைக் கழகம். பல்கலைக்கழக பட்டையப் படிப்பு சான்றிதழ்கள் வழங்கும் போது அவற்றில் தங்கள் பெயர் எப்படி குறிப்பிடப்படவேண்டும் என மாணவர்களைக் கேட்டிருந்தது பல்கலைக்கழக நிர்வாகம்.

அனிந்திதா முகர்ஜி என்கிற திருநங்கை தனது பெயரை மிஸ் என்றோ அல்லது மிஸ்டர் என்றோ குறிப்பிடாமல் மிக்ஸ்(Mx) என்று குறிப்பிட்டால் தனக்கு அது பொருத்தமாக இருக்கும் என்று தெரிவித்தார். உடனேயே பல்கலைக்கழகம் அவரது ஸர்ட்டிபிகேட்டில் மிக்ஸ் அனிந்திதா என்று அடித்துக் கொடுத்திருக்கிறது. இனி அனைத்து நிறுவனங்களும் இந்த வார்த்தையை பயன்படுத்த வாய்ப்புகள் நிறைய இருக்கிறது.

இனிமே நம்ம ‘இப்படிக்கு ரோஸை’ மிஸ் ரோஸ்ன்னு கூப்பிடாதீங்க.. மிக்ஸ் ரோஸ்ன்னு மரியாதையா கூப்பிடுங்க..