1993ல் தாவூத் சரணடையத் தயாராக இருந்தான் – ராம்ஜெத்மலானி

1993ல் மும்பையில் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதல்களில் 350பேர் இறந்துபோயினர்.  1200 பேர் காயமடைந்தனர்.  20 வருடங்களுக்கு முன்பு நடந்த இந்த விஷயத்தை பற்றி ராம்ஜெத்மலானி புதிதாக திரியை பற்ற வைத்துள்ளார்.

ராம்ஜெத்மலானி சில தினங்களுக்கு முன்பு கூறுகையில், மும்பைத் தாக்குதலுக்கு காரணகர்த்தா என்று தாவூத்தை உளவுத்துறை குற்றம் சாட்டிய வேளையில் தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானிலிருந்து இந்தியா கிளம்பி வந்து சரணடையத் தயாராக இருந்ததாகவும், தன்னை துன்புறுத்தாமல் வீட்டுக் காவலில் வைத்திருக்க ஒப்புக் கொண்டால் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்கத் தயார் என்றும் கூறியிருக்கிறான். இதை எழுத்து மூலம் ராம்ஜெத்மலானி சரத் பவாருக்கு தெரிவித்திருக்கிறார். ஆனால் அப்போது மஹாராஷ்ட்ரா முதல்வராக இருந்த சரத் பவார் இதைப் பற்றி கண்டுகொள்ளவேயில்லையாம்.

இப்ராஹிம் சரணடைய விரும்பியதாக இதற்கு முன்பு டெல்லி போலீஸ் தலைவர் நீரஜ் குமாரும் கூறியிருக்கிறார். அதற்குப் பின் வந்த மன்மோகனின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும் தாவூத் மேட்டரை கண்டுகொள்ளவேயில்லையாம். ஏன் ? அவன் சரணடைந்தால் அவனையும்
பாகிஸ்தானையும் துரோகிகள் என்று கை காட்ட முடியாதே. பா.ஜ.கவும் காங்கிரஸூம் பாகிஸ்தான் மற்றும் அங்குள்ள தீவிரவாத இயக்கங்களை வைத்து தானே வட இந்தியாவில் பிழைப்பு நடத்துகின்றன. அது முடியாமல் போய்விட்டால் என்ன செய்வது என்கிற சிந்தனை தான் காரணம்.

இப்போது பா.ஜ.க. சரத் பவார் இந்த விஷயத்தில் பதில் சொல்லவேண்டும் என்று கேட்கிறது. இதையொட்டி தேசபக்தி எழுச்சி தரும் உரை வீச்சுக்களை இனி பா.ஜ.க விடமிருந்து நிறைய எதிர்பார்க்கலாம்.