ராதிகா ஆப்தே நடித்த ‘அகல்யா’ – குறும்படம்

சுஜாய் கோஷ் தனது கஹானி படத்துக்குப் பின் இயக்கியுள்ள குறும்படம் அகல்யா. 14 நிமிடங்களே ஓடக்கூடிய இந்த த்ரில்லர் படத்தில் அகல்யாவாக ராதிகா ஆப்தே நடித்திருக்கிறார். ராதிகா ஆப்தே சமீபத்தில் நடித்த ஹாலிவுட் குறும்படத்திலிருந்து அவரது நிர்வாணக் காட்சிகள் இணையத்தில் வெளியானதை கேட்டிருப்பீங்க.. இல்லை.. பாத்திருப்பீங்க.. நேற்று இணையத்தில் வெளியிடப்பட்ட இந்தப் படம் ‘அந்தப் ‘படம் இல்லை. அதனால் “ஜொள்’ விட்டுப் பார்த்து ஏமாந்து போகவேண்டாம் என்று எச்சரிக்கை தருகிறோம்.

படத்தின் ஆரம்பத்தில் ஒரு போலீஸ் அதிகாரி, ஒரு ஓவியரின் வீட்டிற்கு காணாமல் போன ஒரு இளைஞனைப் பற்றி விசாரிக்க வருவார். அந்த வயதான ஓவியரின் இளமையான கவர்ந்திழுக்கும் மனைவி தான் ராதிகா ஆப்தே. ஓவியரின் வீட்டின் வரவேற்பரை மேஜையின் மேல் போலீஸ் அதிகாரி தேடிவரும் இளைஞனைப் போலவே தோற்றமளிக்கும் ஒரு சிறிய பொம்மை மற்ற பொம்மைகளிடையே சேர்ந்து நிற்கும். சந்தேகம் மேலிட அந்த அதிகாரி ஓவியரிடம் கேட்க அந்தப் பையன் அவரிடம் ஓவியத்திற்கு ‘மாடலாக’ வந்தான் என்று சொல்வார் ஓவியர். அந்தப் பையனுக்கு என்ன ஆனது ? அதிகாரி அவனைக் கண்டுபிடித்தாரா என்பது மீதி குட்டி சஸ்பென்ஸ் கதை.

த்ரில்லராக இந்தக் கதை பார்க்க ஓ.கே.வாக இருந்தாலும் இதற்கும் ராமாயணத்துக்கும், அகல்யாவுக்கும், ராதிகா ஆப்தேவுக்கும், பிரம்மனுக்கும் உள்ள சம்பந்தமும் மர்மத்துக்காக போடப்பட்ட டுபாக்கூரான முடிச்சு என்பதால் கதையின் முடிவு சிலருக்கு கடுப்பேத்தலாம் யுவர் ஆனர். மூன்று சீனில் என்ன பெரிதாக நடிப்பு வெளிப்பட்டுவிடப்போகிறது.

யூ ட்யூபில் வெளியிட்ப்பட்ட இந்தக் குறும்படத்தை கீழே பாருங்க.. கால் மணிநேர த்ரில்லர் படத்தில் ரொம்பப் பெரிசா எதிர்பார்க்காதீங்க.