இதுவரை இசையில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த ஏ.ஆர். ரகுமான் முதன்முறையாக கதாசிரியராகவும் ஆகிறார். அவரே தயாரிக்கும்  ’99 பாடல்கள்’ என்னும் திரைப்படத்தின் கதாசிரியர் ரகுமானே.

அண்மையில் புதிதாய் தொடங்கிய ஒய்.எம் மூவிஸ் என்ற தனது சொந்த நிறுவனத்தின் மூலம் இப்படத்தை தயாரித்து வெளியிடுகிறார். இப்படம், தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாக உள்ளது . இந்த படத்திற்கு ஹிந்தியில் ‘99 Songs’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

கதை இசையை மையமாக வைத்து அமைக்கப்பட்டுள்ள கதையாம். படத்தில் 10 பாடல்கள். இசைக் கலைஞரும், நாடக நடிகருமான விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இத்திரைப்படத்தை இயக்குகிறார். இத்திரைப்படத்தில் முழுக்க முழுக்க புது முகங்கள் நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

Related Images: