இனிமே பாட்டில், க்ளாஸ் இல்லாமலே சரக்கடிங்க!!

பார்ல போய் உக்காந்து ஆர்டர் பண்ணி, மிக்ஸிங் பண்ணி சைட் டிஷ் தொட்டுகிட்டு சரக்கடிச்சு, க்ளாஸை, பாட்டிலை உடைச்சு கஷ்டப்படும் குடிகார அன்பர்களுக்கு ஒரு நற்செய்தி. இனிமே நீங்க குடிக்கறதுக்காக இது எதுவுமே செய்யவேண்டியதில்லை. சும்மா போய் ‘பார்’ல உக்காந்திருந்தாலே போதும். எங்கே தெரியுமா ? இங்கிலாந்தில்.

‘குடிகார கட்டிடக்கலை’ எனப்படும் புது டெக்னாலஜியை இதில் அறிமுகப்படுத்துகிறார்கள். அது என்ன கு.கா.க கலை? சரக்கை எடுத்து வாயில் ஊற்றிக் கொள்வதற்குப் பதில் நமது சுவாசம், மேல் தோல் மற்றும் கண்கள் வழியாக சரக்கை உள்ளே ஏற்றிக் கொள்வதற்குப் பெயர் தான் இது. பாரினுள் நாம் சுவாசிக்கும் காற்றில் சரக்கு சரியான அளவில் மிக்ஸிங் செய்யப்பட்டு ஆவியாக கலக்கப்படுகிறது. அந்த ஆவியை சுவாசிப்பதன் மூலமும், கண் மற்றும் தோலின் வழியேயும் சரக்கு நம் உடலில் ரத்தத்தில் போய் கலந்து விடுகிறது. பின் என்ன ? ஆடவேண்டியதுதான்.

குடிகார உலகமே ஆவலுடன் ஏங்கித் தவித்த இந்தக் கண்டுபிடிப்பை செய்த, பாம்பா(Bompas) மற்றும் பார் (Parr) என்கிற இருவர், இதை முதன் முதலில் லண்டனில் உள்ள பாரோ மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு பழங்கால கட்டிடத்தில் இதை வடிவமைத்துள்ளனர். மணிக்கு 20 டாலர்கள் கொடுத்துவிட்டு இந்த கட்டிடத்தினுள் உள்ள ஆவி மிகுந்த அறைகளில் ஒரு 40 நிமிடம் சுற்றினால் போதும். உங்கள் உடம்பில் ஒரு லார்ஜ் சரக்கு ஏறிவிடும் எபக்ட் கிடைக்கும். ஒவ்வொரு வகை சரக்கிற்கும் ஒவ்வொரு தனியான அறை.

இந்த முறையில் நேரடியாக ஆல்கஹால் ரத்தத்தில் கலப்பதால் 40 சதவீதம் குறைவாக குடித்தாலே போதும். அதாவது 10 ரவுண்ட் போட்டால் வரும் கிக் 4 ரவுண்ட் அளவிலேயே கிடைத்துவிடுமாம். என்னே வசதி !! இந்த ஆல்கஹால் அறைகளுக்குள் நடமாடும்போது ஆல்கஹால் ஆவி நமது உடைகளிலும், தலைமுடியிலும் படிவதைத் தடுக்க ஒரு ப்ளாஸ்டிக் ஓவர்கோட் போட்டுக்கொண்டு நடமாடினால் போதுமானது. இந்த மாத இறுதியில் குடிகார பெருமக்களுக்காக இந்த பார் திறக்கப்பட இருக்கிறதாம்.